Kathir News
Begin typing your search above and press return to search.

மனதிடத்தோடு தன்னை எதிர்த்துப் போரிட்ட தசரதனை வரம் தந்து வாழ்த்திய அனுப்பிய சனி பகவான்!

தன் மக்கள் துன்பம் அனுபவிக்க கூடாது என்பதற்காக சனிபகவானை எதிர்த்து நின்றார் தசரதன். புராணம் கூறும் கதை பற்றி காண்போம்.

மனதிடத்தோடு தன்னை எதிர்த்துப் போரிட்ட தசரதனை வரம் தந்து வாழ்த்திய அனுப்பிய சனி பகவான்!
X

KarthigaBy : Karthiga

  |  18 July 2023 8:00 AM GMT

ராமரின் தந்தையான தசரதன் அயோத்தியை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்து கொண்டிருந்த காலகட்டம் அது. அப்போது ஒரு சங்கடமான நிலை உலகிற்கு ஏற்பட இருப்பதை அவர் அறிந்தார். இது பற்றி அப்போது அரசவை குருவாக இருந்த வசிஷ்டரிடம் தசரதன் கேட்டார் .அதற்கு வசிஷ்டர் "சனிபகவான் ரோகிணி நட்சத்திரத்தை உடைத்துக் கொண்டு சஞ்சாரம் செய்ய போகிறார். இதனால் நாட்டில் மழை பெய்யாது. உயிர்கள் அனைத்தும் பசி பட்டினியால் வாடும்" என்று கூறினார்.


தன் மக்களுக்காக சனி பகவானுடன் யுத்தம் செய்ய முடிவு செய்தார் தசரதன். அதன்படி தன்னுடைய தேரில் ஏறி சனிபகவான் இருப்பிடம் சென்றார். யுத்தத்திற்கு வரும்படி சனிபகவானுக்கு அழைப்பு விடுத்தார். தசரதன் இவ்வாறு செய்வது சனி பகவானுக்கு தசரதனுடைய அறியாமை என்று தெரிந்தது. இருந்தாலும் தசரதன் தன்னுடைய மக்களுக்காக இந்த முடிவை எடுத்து இருப்பது கண்டு சனிபகவான் மகிழ்ந்தார்.


உடனே தசரதனிடம் உனக்கு என்ன வரம் வேண்டும் கேள் என்றார் . தசரதன் "என் நாட்டு மக்கள் எந்தவித துன்பத்தையும் அனுபவிக்க கூடாது. அதற்கு நீங்கள் ரோகினி நட்சத்திரத்தை உடைப்பதை நிறுத்த வேண்டும்" என்று வேண்டினார். சனிபகவானும் அப்படியே ஆகட்டும் என்று கூறி வரம் தந்து வாழ்த்தி அனுப்பினார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News