Kathir News
Begin typing your search above and press return to search.

மகாளய அமாவாசை - வழிபாடும் சிறப்புகளும்!

மறந்தவர்களுக்கு மகாளய அமாவாசை என்று சொல்வது வழக்கம் .அப்படி சிறப்புக்குரிய மகாளய அமாவாசை பற்றி சில தகவல்களை காண்போம்.

மகாளய அமாவாசை -  வழிபாடும் சிறப்புகளும்!

KarthigaBy : Karthiga

  |  8 Sep 2023 6:30 AM GMT

வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட நீங்கள் முன்னோர்களை வழிபட வேண்டிய நாள் இந்த மகாளய அமாவாசை என்பதை மறந்து விடாதீர்கள். முன்னோர்களுக்கு திதி கொடுக்க வேண்டிய தேதியை மறந்தவர்கள் திதி கொடுக்க மறந்தவர்கள் இன்றைய தினத்தில் திதி கொடுத்தால் அது முன்னோர்கள் மனதார ஏற்றுக்கொள்வர் . அறைக்குள் விளக்காக இருக்கும் முன்னோர்களை திருப்திப்படுத்த வழிபட வேண்டிய நாள் அமாவாசையாகும்.


எல்லா மாதங்களிலும் அமாவாசை வந்தாலும் தை மாதம் வரும் அமாவாசையை தைஅமாவாசை என்றும் ஆடி மாதம் வரும் அமாவாசையை ஆடி அமாவாசை என்றும் புரட்டாசி மாதம் வரும் அமாவாசையை மகாளய அமாவாசை என்றும் சிறப்பு வந்ததாக சொல்வார். புரட்டாசி மாதம் 27-ஆம் தேதி(14.10.2023) சனிக்கிழமை அன்று வருகிறது. அன்றைய தினம் முன்னோர்களை நினைத்து வழிபாடு செய்வதன் மூலம் பித்ருக்களுக்கு திதி கொடுப்பதன் மூலமும் முன்னேற்றங்களை வரவழைத்துக் கொள்ள இயலும். திதி கொடுத்தால் விதி மாறும் என்பது முன்னோர் வாக்கு. தடை கற்களை படிக்கற்களாக மாற்றுவது இந்த முன்னோர் வழிபாடு தான்.


SOURCE :DAILY THANTHI

Next Story
கதிர் தொகுப்பு
Trending News