Kathir News
Begin typing your search above and press return to search.

'மந்தாகினி குண்ட்' இந்த குளத்தில் நீராடினால் பாவம் போவது உறுதி - சான்று வழங்கும் கோவில்!

ராஜஸ்தானில் உள்ள சிவன் கோவிலில் உள்ள குளத்தில் நீராடினால் பாவம் நீங்குவது உறுதி என்று சான்றிதழ் வழங்கப்படுகிறது.

மந்தாகினி குண்ட் இந்த குளத்தில் நீராடினால் பாவம் போவது உறுதி - சான்று வழங்கும் கோவில்!

KarthigaBy : Karthiga

  |  7 Nov 2023 4:15 AM GMT

தெற்கு ராஜஸ்தானில் மாநிலத் தலைநகரான ஜெய்ப்பூரில் இருந்து கிட்டத்தட்ட 450 கிமீ தொலைவில் உள்ள பிரதாப்கர் மாவட்டத்தில் கோமதீஸ்வர் மகாதேவ் மந்திர் என்ற கோவில் உள்ளது. இந்த கோவிலின் அருகே 'மந்தாகினி குண்ட்' என்ற ஒரு குளம் உள்ளது.அந்த ‘குண்டத்தில்’ நீராடினால், எந்தவொரு பாவத்திலிருந்தும் ஒருவரை விடுவிக்க முடியும் என்று அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்துகிறது. இதற்கு, 12 ரூபாய்க்கு, ‘பாப் முக்தி’ சான்றிதழ் ஒன்று வழங்கப்படுகிறது. மாநில அரசின் தேவஸ்தானத் துறையின் கீழ் வரும் கோயில் அறக்கட்டளை மூலம் இந்த சான்றிதழ் வழங்கப்படுகிறது.


அந்த ‘குண்டத்தில்’ நீராடினால், எந்தவொரு பாவத்திலிருந்தும் ஒருவரை விடுவிக்க முடியும் என்று அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்துகிறது. இதற்கு, 12 ரூபாய்க்கு, ‘பாப முக்தி’ சான்றிதழ் ஒன்று வழங்கப்படுகிறது. மாநில அரசின் தேவஸ்தானத் துறையின் கீழ் வரும் கோயில் அறக்கட்டளை மூலம் இந்த சான்றிதழ் வழங்கப்படுகிறது.

ஒரு வருடத்தில் மந்தாகினி குளத்தில் நீராடும் சுமார் 250-300 மக்களுக்கு இந்த பாப முக்தி சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன. இந்த நடைமுறை எப்போது தொடங்கியது என்ற விவரங்கள் கிடைக்கவில்லை.பிரபல இந்து முனிவர் மஹிர்ஷி கௌதம் இங்கு நீராடிய பிறகு பசுவைக் கொன்ற பாவம் நீங்கியதாக நம்பப்படுகிறது. அதே பாரம்பரியம் பின்பற்றப்பட்டு வருவதக்கவும் சிலர் சொல்கின்றனர்.


அதனால் வேண்டுமென்றோ அல்லது தெரியாமலோ ஒரு மிருகத்தை கொல்லும் “பாவம்” செய்தவர்கள் அல்லது தங்கள் சமூகத்தால் புறக்கணிக்கப்பட்டவர்கள் ‘இதில் மூழ்கி சான்றிதழைப் பெற முயல்கிறார்கள் என்று கூறப்படுகிறது. சான்றிதழ்கள் " அவர்கள் தலையில் எந்த “பாவத்தையும்” சுமக்கவில்லை என்பதற்கும், புறக்கணிப்பு ரத்து செய்ய ஏற்றவர் என்பதற்கு சான்றாக செயல்படுகின்றன.


பாப் மோசினி மந்தாகினி குளத்தில் குளித்த மக்கள் அருகில் உள்ள அருகில் உள்ள அலுவலகத்தில் அமர்ந்திருக்கும் ‘அமீன்’ ( வருவாய் துறை பணியாளர்கள்) கையெழுத்து மற்றும் முத்திரையுடன் 12 ரூபாய்க்கு சான்றிதழ் பெற்றுச்செல்லலாம். இது அவர்களை மீண்டும் சமூகத்தில் சேர்த்துக்கொள்ள உதவுமாம்.இந்த கோவில் சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது, மேலும் கஜினி மஹ்மூத் கோவிலை தாக்கி ‘சிவலிங்கத்தை’ அழிக்க முயன்றதாகவும், ஆனால் தேனீக்கள் அதிலிருந்து வெளியேறி கஜினியின் ஆட்கள் தாக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அதோடு கஜினியே கோவிலை மீண்டும் கட்டினார். ‘சிவலிங்கம்’ சேதமடைந்தாலும் இன்னும் அதே தான் வழிபடப்படுகிறது என்றும் கூறப்படுகிறது.


ஒவ்வொரு மாதமும் ஆயிரக்கணக்கான மக்கள் கோயிலுக்கு வருகிறார்கள், குறிப்பாக சிவராத்திரி மற்றும் திங்கட்கிழமைகளில், கூட்டம் அதிகமாக இருக்குமாம். பாபா விமோசன காரணம் தவிர்த்து மற்றொரு கதையும் இதற்கு இருக்கிறது, இந்த பகுதியில் உள்ள பழங்குடியினர் தங்கள் குடும்ப உறுப்பினர்களின் இறுதிச் சடங்கிற்குப் பிறகு சாம்பலை ‘குண்டில்’ மூழ்கடிப்பார்கள், எனவே இது ‘வாகத் ஹரித்வார்’ என்று அழைக்கப்படுகிறது.






Next Story
கதிர் தொகுப்பு
Trending News