சரவண பவ மந்திரத்தை தினமும் சொல்வததால் இப்படியொரு ஆச்சர்ய பலனா?
By : Kanaga Thooriga
"ஓம் சரவணா பவ" என்பது முருகனின் மிக சக்தி வாய்ந்த மந்திரம். முருகன் தேவர்களின் தலைவனாவார்.
முருகனின் தந்தையான சிவபெருமான் பிரபஞ்ச குருவாக கருதப்படுபவர், அவரே தக்ஷிணாமூர்த்தியாக முனிவர்களுக்கு ஞானத்தை அளித்தவர், லோக குருவான சிவனுக்கே குருவாக விளங்கியவர் முருகப்பெருமான். அதனாலேயே அவருக்கு "சுவாமிநாத சுவாமி " என்ற பெயர் உண்டு. ஒரு முறை பரமசிவன் ஒரு சாபத்தின் காரணமாக பிரம்ம ஞானத்தை உணர்த்தும் "ஓம்" என்னும் பிரணவத்தை மறந்து விட்டார். பிறகு முருகனிடம் அதை தனக்கு நினைவூட்டும் படி கூறிய போது முருகன் தன்னை குருவாக ஏற்றுக்கொண்டால் பிரணவத்தை உபதேசிப்பதாக கூறினார், சிவனும் அதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டு முருகனை மடியில் அமர வைத்து பிரணவ மந்திரமான "ஓம்" என்னும் மந்திரத்தை முருகன் உபதேசிக்க பெற்றுக்கொண்டு நினைவுகூர்ந்தார் இந்த சம்பவம் கும்பகோணத்தில் உள்ள சுவாமி மலையில் நிகழ்ந்ததாக புராணங்கள் கூறுகின்றன. இந்த தலம் மிகவும் சக்திவாய்ந்த தலமாக கருதப்படுகிறது.
முருகனை வழிபட சிறந்த மந்திரம் "ஓம் சரவணா பவ " என்பதாகும். "ஓம்" என்பது பிரணவத்தை குறிக்கிறது, "ச" என்பது வசீகரிக்கும் சக்தி கொண்டது "ரா" என்பது நம் வாழ்வில் வளத்தை சேர்க்கக்கூடியது "வ" என்பது துன்பம் வறுமை போன்றவற்றை நீக்கக்கூடியது "ந" என்பது நம் வாழ்வின் பிரச்சனைகளை தீர்க்கக்கூடியத "ப" என்பது ஈர்க்கும் ஆற்றலை கொண்டது மற்றும் "வ" என்பது நம் வாழ்வின் எதிர்மறை சக்திகளை அழிக்கும் சக்தி கொண்டது.
இந்த மந்திரம் முருகனின் அருளை பெற சிறந்த மந்திரமாகும், வெள்ளிக்கிழமை நாளில் விரதம் இருந்து இந்த மந்திரத்தை சொன்னால் நம் எண்ணங்கள் பூர்த்தியாகும், நினைத்தது நிறைவேறும்.
"சரணவனபவ" என்கிற மந்திரத்தை மாட்டும் 1008 முறை ஒருவர் தினமும் சொன்னால் அவருக்கு பொன் பொருள் சேர்ந்து வேண்டியது வேண்டிய வண்ணம் நிறைவேறும், இந்த வழிபாட்டை செவ்வாய்க்கிழமைகளில் தொடங்குவது சிறப்பு, அது முருகனுக்கு பிடித்த நாளாகும். ப்ரம்ம முஹுர்த்ததில் எழுந்து குளித்து இந்த மந்திரத்தை 1008 தடவை ஜபித்து இனிப்பான பாலில் குங்குமப்பூ கலந்து முருகனுக்கு நைவேத்யமாக படைத்தால், வாழ்வில் பல சிறப்புகளை அடையலாம் என சாஸ்திரங்கள் கூறுகின்றன.