Begin typing your search above and press return to search.
சிவராத்திரியில் மட்டும் அதிசயமாக தென்படும் சங்கு - எந்த கோவிலில் தெரியுமா?
சிவராத்திரியில் தென்படும் சங்கு பீகார் மாநிலம் தார் மாவட்டத்தில் காதல் என்ற இடத்தில் இருந்து மந்தரமலை என்ற மலை ஒன்று உள்ளது அங்கு ஒரு சங்கடம் இருக்கிறது அங்கு ஒரு அதிசய சங்கு தென்படுகிறது

By :
பீகார் மாநிலம் பாங்கா மாவட்டத்தில், பாகல்பூர் என்ற இடத்தில் இருந்து 25 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள மந்தர் மலை. கடற்கரையை ஒட்டி அமைந்த இந்த மலைப்பகுதியில் சங்கு குளம் ஒன்று உள்ளது.
இந்த மலையானது அமிர்தம் பெறுவதற்காக அசுரர்களும் தேவர்களும் வாசுகி என்ற பாம்பை கயிறாகவும், மந்தார மலையை மத்தாகவும் கொண்டு கடலை கடைந்த இடமாகவும் தலவரலாறு சொல்லப்படுகிறது.
இந்த மலையில் அமைந்த சங்கு குளத்தில் ஒரு சங்கு இருக்கிறது. அது'பாஞ்சசன்ய சங்கு' என்று அழைக்கப்படுகிறது. இந்த சங்கானது, வருடம் முழுவதும் சுமார் 70 அடி முதல் 80 அடி ஆழத்தில் தண்ணீரில் மூழ்கி இருக்கும். சிவராத்திரிக்கு முந்திய தினம் மட்டும் தண்ணீர் வற்றிப் பொதுமக்களின் கண்களுக்குத் தென்படும்.
ஒரே நாளில் தண்ணீர் வற்றுவதும் மறுநாளே தண்ணீர் பெருக்கெடுத்து சங்கு மூழ்கிப் போவதும் பிரமிப்பான அதிசயமாக உள்ளது.
Next Story