இந்த தெய்வங்களுடன் கண்ணாடியையும் வைத்து வணங்குவதால் நிகழும் அதிசய பலன்கள்!
By : G Pradeep
எல்லோர் வீட்டிலும் பூஜை அறை என்று தனியாக ஒரு அறை இருக்கும் இதில் குல தெய்வம் இஷ்ட தெய்வம் தவிர மற்ற பல தெய்வங்களின் படம் இருக்கும், ஆனால் பூஜை அறையில் கட்டாயம் இருக்க வேண்டிய சுவாமி படங்கள் சில இருக்கின்றன, எந்த குல தெய்வங்களை அல்லது இஷ்ட தெய்வங்களை வணங்கினாலும் இந்த குறிப்பிட்ட தெய்வங்களின் படம் அங்கு இருக்க வேண்டும்.
லஷ்மி, விநாயகர், முருகன், சரஸ்வதி, பெருமாள் இந்த ஐந்து தெய்வங்களின் படம் எந்த பூஜை அறையிலும் கட்டாயம் இருக்க வேண்டும். இந்த ஐந்து தெய்வங்கள் சேர்ந்த திருஉருவ படம் இல்லை என்றாலும் கூட ஏதாவது விஷேச தினத்தன்று அதை கட்டாயம் வாங்கி விட வேண்டும், குறிப்பாக புது வீடு கட்டுதல் அல்லது புது தொழில் தொடங்குதல் போன்ற நிகழ்வுகளில் இந்த தெய்வ பாடங்களை வைத்திருப்பார்கள்.
இதற்க்கு ஒரு அற்புதமான காரணம் உண்டு சரஸ்வதி கணபதி லஷ்மி முருகன் இந்த நான்கு தெய்வங்களின் முதல் எழுத்தை சேர்க்கும் போது "சகலமு (ம் )" என்கிற வார்த்தை வந்துவிடுகிறது கடைசியில் இருக்கும் பெருமாள் வெற்றிகளையெல்லாம் சேர்த்து தரும் வெற்றி தெய்வமாக கருதப்படுகிறார்
இந்த படங்களுடன் ஒரு கண்ணாடியையும் வைத்து வழிபடுவது சிறந்தது, சங்கு சாளக்ராமம் சோழி கோமதி சக்கரம் லஷ்மி கடாச்சம் பொருந்திய பொருட்களுக்கு இணையானது இந்த முகம் பார்க்கும் கண்ணாடி என்று சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது.
இதன் மூலம் வீட்டில் கண் திருஷ்டி குறையும் என்றும் முன்னோர்களின் படம் குலா தெய்வங்களின் படம் இல்லாதவர்கள் வீட்டில் இறந்தவர்களின் ஆன்ம அல்லது அந்த வீட்டின் குல தெய்வம் மறைமுகமாக வீட்டிற்குள் வரும் சமயத்தில் அதன் பின்பமானது இந்த கண்ணாடியில் தெரியும் போது நம்மை இந்த வீட்டில் மாறக்காமல் வழிபடுகிறார்கள் என்று திருப்தி அடைந்து நம்மை ஆசீர்வதிக்கும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. ஆகவே நமது பூஜை அறையில் எந்த தெய்வத்தின் படம் இருக்கிறதோ இல்லையோ கணபதி சரஸ்வதி லஷ்மி முருகன் பெருமாள் படத்துடன் ஒரு கண்ணாடி ஆகியவை கண்டிப்பாக இருக்க வேண்டும்