மன அழுத்தத்துக்கு மகத்தான மருந்து 'இசை'
மனதிற்கு இனிமை தரக்கூடிய இசையை கேட்பதால் ஏற்படக்கூடிய நன்மைகளும் மனதிலும் உடலிலும் ஏற்படக்கூடிய புத்துணர்வு மாற்றங்களும் குறித்த தகவல்
By : Karthiga
மனநலனை மேம்படுத்தவும், பிரச்சனைகளில் இருந்து விடுபடவும், எப்பொழுதும் நம்மை புத்துணர்வோடும் வைக்க உதவுவது இசை. இது மனதை மட்டும் இல்லாமல் உடலையும் புத்துணர்வடைய செய்யும் .சோகமான இசை அல்லது பாடலை கேட்கும் போது மனதில் லேசான சோகம் உணர்வு தோன்றும் அந்த சமயத்தில் செய்து கொண்டிருக்கும் வேலைகளின் வேகம் குறைந்துவிடும். துள்ளலான உத்வேகமான இசை மெட்டுக்களை கேட்கும்போது மனமும் உடலும் இயல்பை விட அதிக உற்சாகமடையும். இதை நம்மால் எளிதில் உணர முடியும்.
இசை உடல் தசைகளை தளர்வாக்கும். மன அழுத்தத்தை குறைக்கும். தொடர்ந்து ஒரு நிமிடம் இசையை கேட்கும்போது அதன் மெட்டுக்கள் தன்னிச்சையாக மூளையின் ஆல்பா அலைவரிசை ஏற்படுத்தும் துடிப்புடன் ஒத்துப் போகின்றன.இதனால் ரசாயன மாற்றங்கள் உண்டாகி மனதையும் உடல் இயக்கங்களையும் கட்டுப்படுத்துகிறது. சீரான தூக்கத்துக்கு உதவுகிறது.
இசையை தொடர்ந்து கேட்கும் போது மூளையின் செயல்பாடுகள் சீராகி நினைவுத்திறன் மேம்படும். ஒரே விஷயத்தில் ஈடுபடாமல் புதிய முயற்சிகளை மேற்கொள்ளத் தூண்டும். தினமும் 45 நிமிடங்களாவது இசை கேட்பது உடலுக்கும் மனதுக்கும் புத்துணர்வு அளிக்கும் என்று பல ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.