நலமான வாழ்விற்கு நாகலட்சுமி நாராயணர் திருக்கோவில்!
சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள முதல் குறுக்கு தெருவில் சிவ விஷ்ணு ஆலயமாக காட்சி தருகிறது. நாகலக்ஷ்மி நாராயணர் கோவில்.
By : Karthiga
மகாலட்சுமி நாராயணர் திருக்கோவிலில் "மூலவர் ஸ்ரீ நாக லட்சுமி நாராயணர்" ஆதிசேஷன வாகனத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேதராக நின்றகோலத்தில் அருள்பாலிக்கிறார். அவருடன் பரிவார தெய்வங்களாக ஸ்ரீ மகாலட்சுமி, வராஹர், நரசிம்மர் விஷ்ணுவிற்கு ஆஞ்சநேயரும் வலது பக்கத்தில் சிவன், பார்வதி, முருகன் நவ கிரகங்கள் என அனைத்து தெய்வங்களும் ஒன்று சேர்ந்து பக்தர்களுக்கு அருள் பாலித்த வரும் சக்தி வாய்ந்த ''சிவவிஷ்ணு திருக்கோவில் அமைந்திருக்கிறது.
சிவன் கோயில்கள் என்றால் பஞ்சமூர்த்திகளை தரிசிப்பது சிறப்பானதாகும். பஞ்சமூர்த்தி என்பது விநாயகர், பெருமாள், அம்பாள், முருகன் சண்டிகேஸ்வரர் ஆகியோர்கள். இவர்களை தனித்தனி சன்னதிகளாக வெவ்வேறு இடங்களுக்கு சென்று தான் நாம் தரிசிக்க முடியும். அப்படித்தான் கோயிலின் அமைப்பிருக்கும். ஆனால் இந்த கோயிலில் ஒரே இடத்தில் நின்றவாறு பஞ்சமூர்த்திகளையும் தரிசித்து அருள் ஆசி பெற முடியும்.
ஒரு தம்பதியினருக்கு புத்தி சுவாதீனம் இல்லாத மகன் பிறந்து இருக்கிறான். அவன் புத்தி சுவாதீனம் இல்லாத போதும் கட்டட வேலைக்குச் சென்று உழைத்துக் கொண்டு வாழ்ந்து வந்தான். ஒரு நாள் வேலைக்கு செல்கின்ற அந்தப் பையன் மீண்டும் வீடு திரும்பவில்லை. அவர்களின் பெற்றோர்கள் எங்கு தேடியும் அந்த பையன் கிடைக்கவில்லை. அழுது கொண்டே இந்த கோவிலுக்கு வந்திருக்கிறார்கள் மகனை தொலைத்து விட்ட தம்பதி. அவர்களை அழைத்த கோயிலின் குருக்கள் நடந்தவற்றை கேட்டறிந்தார்.
பின்னர் இங்குள்ள பெரிய புற்றுக்கு பால் ஊற்றி , மணமுருகி வழிபாடு செய்யுங்கள். நிச்சயம் உங்கள் மகன் உங்களை தேடியே வருவான் என்று சொல்லி இருக்கிறார். அந்த தம்பதியும் நம்பிக்கையோடு புற்றுக்கு பால் ஊற்றி தன் மகன் வீடு திரும்ப வேண்டும் என்று பிரார்த்தித்து வீட்டிற்கு செல்ல மதுரை மாட்டுத்தாவணியில் இருந்து ஒரு கைபேசி அழைப்பு வந்திருக்கிறது. அதில் உங்கள் மகனின் சட்டை பாக்கெட்டில் இந்த நம்பர் இருந்தது. உங்கள் மகனை கண்டதும் அவர் புத்தி சுவாதீனமற்றவர் என்பது எங்களுக்கு புரிந்தது. உங்கள் மகனை அழைத்து செல்ல வாருங்கள் என மறுமுனையில் பேசியவர் தெரிவிக்க இவர்கள் ஓடிச் சென்று மகனை மீட்டு வந்திருக்கிறார்கள்.
இப்படி வேலை இல்லாதவருக்கு வேலை குழந்தை இல்லாதவருக்கு குழந்தை திருமணமாகாதோருக்கு திருமணம் என பக்தர்கள் வேண்டியதை அப்படியே வழங்கி நிறைவேற்றுகிறார் நாகலக்ஷ்மி நாராயணமூர்த்தி. இந்த கோவிலின் அமைவிடம் ராஜா அண்ணாமலைபுரத்தில் முதல் குறுக்கு தெருவில் சுற்றுப்புறம் முழுவதும் வீட்டு கட்டிடங்கள் சூழ்ந்து இருக்கும் இடம் மத்தியில் அமைதியான மனதிற்கு இதமளிக்கும் விதத்தில் அமைந்துள்ளது.