Kathir News
Begin typing your search above and press return to search.

நாரத முனி அடிப்படையில் மகா ஞானி !

Narada Muni.

நாரத முனி அடிப்படையில் மகா ஞானி !

G PradeepBy : G Pradeep

  |  11 Sep 2021 12:56 AM GMT

தேவ ரிஷி நாரதர் அல்லது நாரத முனி பிரம்மரின் புதல்வர். மஹாவிஷ்ணுவின் அதி தீவிர பக்தர். இவர் பிரபஞ்சம் சுற்று ஒருவரை பற்றி ஒருவரிடம் சொல்வார் என்கிற பொதுவான ஒரு பிம்பம் உண்டு. "நாரதர் கலகம் நன்மையில் முடியும் " என்ற பழமொழியும் உண்டு.

நாரதர் என்றால் ஏதேனும் இரு ஆட்களிடையே ஒரு கலகத்தை உருவாக்கி அதில் நன்மையை உருவாக்குவார் என்பது பொதுவான கருத்து. விஷ்ணுபுராணத்தின் படி, "நரம் னார் சம்யூகம் கலாஹீனா த்யாதி கந்தயாதிதி " என சொல்கின்றனர். அதாவது ஒரு கலகத்திற்கு காரணமாக இருப்பவர் நாரதர். ஆனால் ஒருபோதும் நெஞ்சில் தீய எண்ணமோ, வஞ்சகமோ இல்லாத பரிசுத்த ஆன்மா. உலக நன்மைக்காக வித்யாசமான ஒரு யுத்தியை கையாண்டவர்.

நாரத முனியை அடிப்படையில் ஒருவர் புரிந்து கொள்வது சற்று கடினம். மிகவும் சிக்கலான பிம்பத்தை உடையவர். பார்ப்பதற்கு வேடிக்கையான, விளையாட்டான பாவனைகளை வெளிப்படுத்தினாலும். அடிப்படையில் மகா ஞானி, அறிவுக்களஞ்சியம். புராணங்களை புரட்டி பார்த்தால் அவர் நிகழ்த்திய லீலைகளும், அற்புதங்களும் ஏராளம்.

நாரதர் என்பவர் கருத்து பரிமாற்றத்தின் அடையாளம். தெய்வீக கருத்துக்களை தேவையான இடங்களில் உலகமெங்கும் பரப்பியவர். மூவுலகங்களிலும் இடைவெளி இன்றி சுழன்றவர். தேவையான தகவல்களை, தேவர்களுக்கு, அசுரர்களுக்கு மற்றும் மனிதர்களுக்கு மாறி மாறி வழங்கியவர். சப்தகாலபத்ரூமாவில் இவர் குறித்த குறிப்புகள் உண்டு. தெய்வீக ஞானத்தை பரப்புபவர் என்று பொருள். இவர் குறித்து பிரபலாம சொல்லப்படும் பல புராணக்கதைகள் உண்டு, சிவபெருமான் குடும்பத்தில் முருக பெருமானுக்கும், விநாயகருக்கும் இடையே யார் பெரியவர் என்ற லீலையை அறங்கேற்றினார்.

முப்பெரும் தேவிகளான, சரஸ்வதி, லட்சுமி, பார்வதிக்கிடையே யாருடைய தன்மை பெரியது என்கிற விவாதத்தை கிளப்பி, மூவரும் கல்வியா, செல்வமா அல்லது வீரமா என்ற கலகத்தை உருவாக்கிய போது உலகம் என்றென்றும் நலமுடன் இருக்க மூன்று தன்மையுமே சம அளவில் தேவை என்பதை நிலைநாட்டியவர். தன்னுடைய பரம குருவான மஹா விஷ்ணுவுக்கே பல லீலைகள் நிகழ்த்தியவர். அனைத்து நிகழ்த்திய பின் தன்னை ஆட்டுவித்தவர் மஹா விஷ்ணு என்கிற சமர்பணத்தையும் வழங்குபவர்.

கர்நாடாகவில் ரய்ச்சூரிலிருந்து 29 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது நாரதர் கோவில். கோர்வா என்பது இந்த பகுதியின் பெயர்.

Image : Pranams

Next Story
கதிர் தொகுப்பு
Trending News