Kathir News
Begin typing your search above and press return to search.

கடன் தொல்லையிலிருந்து பக்தர்களை காத்தருளும் நரசிம்மர் வழிபாடு!

கடன் தொல்லையிலிருந்து பக்தர்களை காத்தருளும் நரசிம்மர் வழிபாடு!

கடன் தொல்லையிலிருந்து பக்தர்களை காத்தருளும் நரசிம்மர் வழிபாடு!

Thoorigai KanagaBy : Thoorigai Kanaga

  |  15 Nov 2020 7:59 AM GMT

நரசிம்மம் என்றால் ஒளிப்பிழம்பு என்று பொருள், இவர் மிக உக்கிரமானவர் என்றாலும் பக்தர்களுக்கு அருள் பாலிப்பவர் இவரை வழிபட்டால் வழக்குகளில் வெற்றி எதிரிகளை மேற்கொள்ளுதல் போன்றவை சித்தியாகும். நரசிம்மரை “ம்ரித்யுவிஸ்வாஹா” என்று சொல்லி வழிபட்டால் மரண பய நீங்கும். நரசிம்மருக்கு தேசம் முழுவதும் கோவில்கள் இருந்தாலும் தமிழ்நாடு கர்நாடக மற்றும் ஆந்த்ராவில் தான் கோவில்கள் அதிகமாக உள்ளன.

தீராத வியாதி உள்ளவர்கள் மன நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மன நிலை தடுமாறியுஅவர்கள் கிரஹங்களின் தோஷத்தால் துன்புறுத்துவார்கள் கடன் தொல்லையில் கஷ்டப்படுபவர்கள் நரசிம்மரை வழிபட்டால் நல்ல பழங்கள் கிடைக்கும். இவரின் கோவில்கள் இவர் அதித மலை உச்சி மற்றும் குகை பகுதிகளிலுமே காணப்படுகின்றன.

தமிழகத்தில் நாமக்கல்லில் உள்ளது சக்திவாய்ந்த நரசிம்மராகும் இவர் யோகா நரசிம்மராக அருள் பாலிக்கிறார், சென்னை சிங்கம் பெருமாள் கோவில் தலத்தில் நரசிம்மர் சாளக்ராம கல் மழையுடன் விரலிலும் மார்பிலும் ரத்த கரை போன்ற சிவப்பு நிறத்துடன் காண படுகிறார்

நரசிம்மர் விஷ்ணுவின் அவதாரமாவர் அவதாரங்களிலேயே உக்கிரமான அவதாரமாக கருதப்படும் இவரை தொடர்ந்த வழிபட்டால் த்ரிஷ்டி தோஷங்கள் எதுவும் வராது. சிவப்பு நிற அரளி மற்றும் செம்பருத்தி பூக்கள் நரசிம்மருக்கு மிகவும் பிடித்ததாகும்.

நரசிம்மர் வழிபாடு கணவன் மனைவி சண்டைகளை தீர்த்து வைக்கும். மற்ற எந்த நாட்களில் இல்லாவிட்டாலும் நரசிம்ம ஜெயந்தி அன்று நரசிம்மரை வழிபடுவது மிக சிறந்தது ஆகும். நரசிம்மரை வழிபடும் போது வாயு மூலை எனும் வடமேற்கு திசையில் வைத்து வழிபட வேண்டும். பொதுவாக விரத நாட்களின் பால் பழம் மற்றும் நீராகாரங்களை எடுத்துக்கொள்வார்கள்.

ஆனால் நரசிம்மருக்கு விரதம் இருப்பவர்கள் நீரகரமாக பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களை கட்டியம் தவிர்க்க வேண்டும். பாகவதம் படிப்பது நரசிம்ம வழிபாட்டிற்கு உகந்தது அதுவும் பிரத்யேகமாக பிரகலாத சரித்திரத்தில் 7 ஆவது ஸ்கந்தம்1 முதல் 10 அத்தியாயங்களை படிப்பது அபிரிமிதமான பலன்களை தரும்.

காட்சிக்கு உக்கிர தோற்றத்தை கொண்டிருந்தாலும், பக்தர்கள் கேட்ட வரத்தை நல்கும் கருணை பொங்கும் மூர்த்தி நரசிம்மர். சனிக்கிழமை தோறும் நரசிம்மரை வணங்கினால் வாழ்வில் உள்ள சிரமங்கள் அனைத்தும் விலகி போகும் என்பது திண்ணம்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News