மூன்றாம் நாள் நவராத்திரி : சைத்ர நவராத்திரி பூஜை, அன்னை சந்திரகாந்தாவை வணங்குவதால் ஏற்படும் அற்புதம்!
By : Dhivakar
மூன்றாம் நாள் நவராத்திரி : சைத்ர நவராத்திரி பூஜை, அன்னை சந்திரகாந்தாவை வணங்குவதால் ஏற்படும் அற்புதம்!
நவராத்திரியின் மூன்றாம் நாள். முத்தான நாள். முக்தியை வழங்கும் நாள். அன்னை பார்வதிக்கென அர்பணிக்கப்பட்ட முதல் மூன்று நாட்களின் முத்தாய்ப்பான நாளின்று. இந்த நாளை சைத்ர நவராத்திரி பூஜை என்றழைக்கின்றனர். நவ துர்கையின் வடிவத்தில் ஒரு ரூபமானவள் சந்திரகாந்தா.
புலி வாகனத்தில் பவனி வந்து, தலையில் பிரை சூடி பிரகாசமாக காட்சியளிக்கும் அன்னை. சந்திரகாந்தா எனும் பெயருக்கு தலையில் பிறை சூடியிருக்கும் அன்னை என்று பொருள். தேவி பத்து கரங்கள் கொண்டு அதில் ஆயுதங்கள் ஏந்தி காட்சி தருபவளாக உள்ளார். தீமைகளை அழித்து, நன்மைகளை நிலைநாட்ட, எதிர்வரும் போரில் அரக்கர்களை வீழ்த்த கையில் ஆயுதங்களுடன் போருக்கு தயராக இருப்பவரை போன்றதொரு ரூபம்.
தேவியை வணங்குவோருக்கு நொடிப்பொழுதில் காட்சி தந்து துன்பங்களை தவிடு பொடியாக்கும் அதிசயங்கள் நிகழ்வதுண்டு தேவியின் பிறையிலிருந்து எழும் ஒளியானது அரக்கர்களை அழித்து, பக்தர்களின் ஆனந்தமான வாழ்விற்கு தடையாக இருக்கும் தீமைகளை அழிப்பதாக உள்ளது. சுக்ரனின் அதிபதியாக விளங்குபவர் அன்னை சந்திரகாந்தா. எனவே தன்னை வணங்கும் பக்தர்களுக்கு வேண்டும் வரம் தந்து அனைத்து இன்பங்களையும் நல்குபவராக உள்ளார்.
மாதா சந்திரகாந்தா அவர்களுக்கு உகந்த மலராக இருப்பது மல்லிகை. எனவே நவராத்திரியின் மூன்றாம் நாள் அன்னைக்கு மல்லிகை பூவை அர்ப்பணம் செய்து தேவியை வணங்குவது சிறப்பை தரும். 16 வகையான அர்ப்பணங்கள் உங்களால் முடிந்த அர்ப்பணங்களை செய்து பூஜை மற்றும் ஆரத்தியுடன் வழிபாட்டை நிறைவு செய்யலாம்.
இந்த பூஜையின் போது சொல்ல வேண்டிய ஸ்துதி:
ஆவும் தேவி சந்திரகாந்தியை நமஹ
இந்த பூஜையை நாம் செய்வதால் ஒருவர் மனதிலிருக்கும் அச்சம் நீங்கும். வாழ்வின் அனைத்து நிகழ்வுகளின் மீதும் நம்பிக்கை பிறக்கும். தேவியின் பிறையில் இருக்கும் மணி ஒலி சகல விதமன தீமைகளையும் தூர விரட்டும். எனவே வீடுகளில் சந்திரகாந்தா பூஜை செய்வதால், எதிர்மறை எண்ணங்கள் அழிக்கப்பட்டு வீடு சுத்திகரிக்கப்படுகிறது .
புதிதாக எதையேனும் செய்ய இருப்பவர்கள் இந்த பூஜையை செய்துவிட்டு தொடங்கினால் அனைத்தும் வெற்றிகரமாகவே அமையும். அன்னையின் அருளை பரிபூரணமாக பெறலாம்.
Image : Rudraksha Ratna