வினைகள் அகற்றி வேண்டியது வேண்டிய படியே கிடைக்கச் செய்யும் சஷ்டி விரதம்!
சஷ்டி விரதத்தின் பலன்கள் பற்றியும் மகத்துவம் பற்றியும் காண்போம்.
By : Karthiga
"வேலுண்டு வினையில்லை திருநீறுண்டு பயம் இல்லை" என்பது கந்தனை வழிபடுபவருக்காக சொல்லப்படுகிற தாரக மந்திரம். வேலவனை வழிபட்டால் தீராத வினைகள் அகலும். வெற்றிகள் வந்து சேரும். அப்படி முருகப்பெருமானுக்கு உகந்த விரதமாக இருக்கும் விரதங்களில் ஒன்று தான் சஷ்டி விரதம். சஷ்டி விரதம் கடைபிடிக்கும் போது பகலில் உறங்குதல் கூடாது .ஆறு காலங்களிலும் பூஜை செய்ய வேண்டும். முருகனின் சரித்திர கதைகள் முருகனின் பாடல்களை பாராயணம் செய்தல் வேண்டும்.
மாதந்தோறும் வரும் சஷ்டி விரதத்தை கடைபிடிப்பதும் சிறப்பான பலனைத் தரும். ஐப்பசி மாதத்தில் பிரதமையில் தொடங்கி சஷ்டி வரை இருக்கும் ஆறு தினங்கள் சஷ்டி விரதத்தை கடைபிடிப்பது கூடுதலான புண்ணியத்தையும் சகல நன்மைகளையும் வரவழைக்கும். சஷ்டி விரதத்தை கடைபிடிப்பவர்களின் வினைகள் வெந்து சாம்பலாகும். வெற்றிகள் வந்து சேரும். கந்தனின் அருள் பரிபூரணமாக கிடைக்கும்.