ஐயப்ப பக்தர் தாக்கப்பட்ட சர்ச்சை.. உண்டியலை தொட்ட விடுவோமா? அறநிலையத்துறை பதில்..
By : Bharathi Latha
டிசம்பர் மாதத்தில் தென்னிந்தியாவில் உள்ள கோயில்களில் ஐயப்ப பக்தர்கள் அதிக அளவில் வருகை தரும் ஒரு மாதமாகும். அவர்கள் தமிழ்நாட்டின் கோயில்களுக்குச் செல்லும் அல்லது திரும்பும் வழியில் தரிசனம் செய்கிறார்கள். ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி கோயிலும் அவர்கள் அதிக அளவில் வந்து செல்லும் கோயில்களில் ஒன்றாகும். ஐயப்ப பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என்று கோஷமிட்டதால், வரிசையில் நின்ற பக்தர்களுக்கும், தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகளுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக ஐயப்ப பக்தர்கள் கோவிலில் இருக்கும் உண்டியலில் அதிக சத்தம் தரும் வகையில் அதை அடித்ததாகவும் அங்கே இருக்கும் இந்த சமய அறநிலைத்துறை அதிகாரிகள் கூறியிருக்கிறார்கள்.
மேலும் கூட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக கோவில் நிர்வாகம் சார்பில் கூட்டத்தை கட்டுப்படுத்த ஒரு அதிகாரி நியமிக்கப்பட்டதாகவும், கூட்டத்தில் இருக்கும் ஐயப்ப பக்தர்கள் அனைவரும் கோவிந்தா, கோவிந்தா என்று கோஷத்துடன் உண்டியல அதிக சத்தத்துடன் அடித்ததாகவும் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு இருக்கிறது. அப்போது காவலர்களுக்கும், பக்தர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது.
இந்த மோதலில் ஆந்திராவைச் சேர்ந்த ஐயப்ப பக்தர் ஒருவருக்கு மூக்கு உடைந்து, மூலஸ்தானம் அருகே ரத்தம் கொட்டியது. பின்னர் பரிகார பூஜைக்காக கோவில் மூடப்பட்டது, மேலும் பக்தர்கள் காவலர்களுக்கு எதிராக புகார் அளித்தனர். அண்டை மாநிலங்களில் இருந்து வந்த பக்தர்கள் மீது காவலர்கள் மற்றொரு புகார் அளித்தனர். இந்த சம்பவம் குறித்த செய்தி சமூக ஊடக வட்டாரங்களில் பரவத் தொடங்கியது. மேலும் கோவிலுக்குள் என்ன நடந்தது? என்று குறித்து HR & CE துறை இவ்வாறு விளக்கம் அளித்துள்ளது.
Input & Image courtesy: News