Kathir News
Begin typing your search above and press return to search.

நடராஜர் தரிசனத்தால் கிட்டும் நன்மைகள்!

'தில்லைக் கூத்தன்' எம்பெருமான் நடராஜரை தரிசனம் செய்வதால் வாழ்வில் கிடைக்கும் நன்மைகளைப் பற்றி காண்போம்.

நடராஜர் தரிசனத்தால் கிட்டும் நன்மைகள்!

KarthigaBy : Karthiga

  |  10 Jun 2024 7:47 AM GMT

நடனக் கலையில் சிறந்து விளங்க வேண்டும் என்று விரும்புபவர்கள் நாடக மற்றும் கலைத்துறையில் பிரகாசிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் நடராஜபெருமான் வழிபாட்டை முறையாக மேற்கொள்ள வேண்டும். சிவாலயங்களில் சிவன் சன்னதிக்கு அருகிலேயே சிவகாமி அம்மன் உடனாகிய நடராஜபெருமான் இருப்பார். முயலகனை வதம் செய்த கோலத்தோடு கால் தூக்கி ஆடும் அவரின் தரிசனத்தை ஆனி திருமஞ்சன நாளில் நாம் கண்டு தரிசித்து மகிழ வேண்டும்.மிதுன ராசியில் சூரியன், சஞ்சரிக்கும் ஆனி மாதத்தில் இந்த விழா நடைபெறுகின்றது.

நடராஜ பெருமானுக்குரிய இரண்டு தரிசனங்களில் முதல் தரிசனம் ஆனி மாதத்திலும் இரண்டாவது தரிசனம் மார்கழி மாதத்திலும் நடைபெறும். அதில் வருட தொடக்கத்தில் வரும் ஆனி மாதத்தில் உத்திர நட்சத்திரத்தன்று நடராஜர் அபிஷேகம் நடைபெறும். இந்த மாதத்தில் ஆடலரசனைப் பாடிப் பணிந்து வழிபட்டால் கோடி கோடியாய் நன்மை கிடைக்கும். அன்றைய தினம் சிவபுராணம் பாடி இறைவனை தரிசனம் செய்தால் நினைத்த காரியங்கள் சிறப்பாக நிறைவேறும் .வந்த துயரங்கள் வாசலோடு நின்றுவிடும். எந்தக் குறைபாடாக இருந்தாலும் அதை அகற்றும் ஆற்றல் இந்த இறைவழிபாட்டிற்கு உண்டு.

'நடராஜரை தில்லைக் கூத்தன்' என்றும், ஆடல் அரசன் என்றும், கூத்தபிரான் என்றும் அழைப்பது வழக்கம். ஆடிய பாதத்தோடு கருணை கொண்டு வாழ்வை வளப்படுத்துபவர் நடராஜபெருமான். கலைகளில் உலகப் புகழ் பெற விரும்புபவர்கள் நடராஜரை முழுமையாக வழிபட வேண்டும். அதற்கு உகந்த நாளான உத்திர நட்சத்திரம் மிகவும் சிறப்பு வாய்ந்தது .

நடராஜர் தரிசனம் நடைபெறும் நேரத்தில் நாம் நடராஜரை தரிசித்தால் இனிய வாழ்வு வந்தமையும். 'திருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்திற்கும் உருகார்' என்பது பழமொழி .அந்த அடிப்படையில் நாம் இறைவன் சன்னதியில் திருவாசகம் பாடினால் அவர் தரிசனம் நமக்கு கிடைப்பதோடு அவருடைய அருளும் நமக்கு வந்து சேரும்.

நமச்சிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க! இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க!கோகழி ஆண்ட குறுமனிதன் தாள் வாழ்க !ஆகமம் ஆகி நின்று அண்ணிப்பான் தாள் வாழ்க! ஏகன் அனேகன் இறைவனடி வாழ்க!

மேற்கண்ட திருவாசகப் பாடலை பாடினால் நலமும் வளமும் வந்து சேரும். நாமும் நம்மைச் சார்ந்தவர்களும் நன்றாக வாழ்வோம்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News