Kathir News
Begin typing your search above and press return to search.

மூன்று முகங்களோடு அதிசய காட்சி தரும் திருவக்கரை சந்திரமவுலீஸ்வரர் ஆலயம்!

திருவக்கரை சந்திரமவுலீஸ்வரர் ஆலயத்தில் உள்ள சிவலிங்கத்தில் மூன்று முகங்கள் காட்சி தருவது சிறப்பாக கருதப்படுகிறது.

மூன்று முகங்களோடு அதிசய காட்சி தரும் திருவக்கரை சந்திரமவுலீஸ்வரர் ஆலயம்!
X

KarthigaBy : Karthiga

  |  12 July 2024 6:13 PM GMT

சிவன் கோவில்களில் இருக்கும் சிவலிங்கம் அருவுருவ வடிவமாக இருக்கும். அது தவிர ஆலயத்தில் நடராஜர், பிச்சாடனார் போன்ற பல்வேறு தோற்றங்களில் இறைவன் உருவ வடிவமாக இருப்பார். ஆனால் திருவக்கரையில் உள்ள சந்திரமவுலீஸ்வரர் கோவிலில் உள்ள சிவலிங்கம் மூன்று முகங்களோடு கூடிய சிவலிங்கத் திருமேனியாக காட்சி தருகிறது. இது எந்த தலத்திலும் இல்லாத அபூர்வமான அமைப்பாகும்.

இதில் கிழக்குமுகமாக இருப்பது தத்புருஷ முகமாகவும், வடக்கு முகமாக இருப்பது வாமதேவ முகம் என்றும், தெற்கு நோக்கி இருப்பதை அகோர மூர்த்தியாகவும் பக்தர்கள் வணங்குகிறார்கள். இந்த ஆலயத்தில் மேலும் ஒரு சிறப்புமிக்க சந்நிதி உள்ளது. அது திருவக்கரை வக்ரகாளியம்மன். வக்ராசுரன் என்ற அசுரனை அழித்த காளிதேவி என்பதால் இந்தப் பெயர் பெற்றதாக கூறப்படுகிறது. திருஞானசம்பந்தரால் பாடப்பட்ட திருத்தலம் இதுவாகும்.

ரத்னரயம் என்று போற்றப்படும் சிவன், பெருமாள், பார்வதி ஆகிய மூவரும் அருள்பாலிக்கும் திருத்தலம் இதுவாகும். திண்டிவனம் புதுச்சேரி சாலையில் மயிலம் தாண்டி சிறிது தூரம் சென்றால் பெரும்பாக்கம் என்ற இடம் உள்ளது. அங்கிருந்து தெற்கு நோக்கி பிரியும் சாலையில் ஏழு கிலோமீட்டர் தூரம் சென்றால் திருவக்கரை திருத்தலத்தை அடையலாம். திண்டிவனம் மற்றும் விழுப்புரத்தில் இருந்து பஸ் வசதி உண்டு.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News