சுப்ரபாதம் தோன்றிய வரலாறு இதுதான்!
கௌசல்யா சுப்ரஜா என தொடங்கும் சுப்ரபாத பாடலை அறியாதவரே இருக்க முடியாது . அப்படி பிரசித்தி பெற்ற இந்த பாடலின் தோற்றம் குறித்து காண்போம்.
By : Karthiga
சுப்ரபாதம் ராமபிரானை துதிப்பதாகத்தான் நாம் அனைவரும் அறிந்திருக்கிறோம். ஆனால் உண்மையில் ராமனின் பெருமையை கூறுவது போல அவரின் தாயார் கௌசல்யாவை புகழ்ந்து கூறுவது தான் சுப்ரபாதம் என்பதை ஆழ்ந்து கூர்ந்து கவனித்தால் புரியும். விசுவாமித்திரரின் யாகத்தினை காக்க சென்ற போது கங்கை கரையில் ராம லக்ஷ்மணர்கள் தங்களை மறந்து தூங்கிக் கொண்டிருந்தனர். அவர்களை அழைத்துக் கொண்டு வந்த விசுவாமித்திரர் அதிகாலைப் பொழுதில் எழுந்து கங்கையில் நீராடி ஜெப தபங்களையெல்லாம் முடித்துவிட்டு ராம லக்ஷ்மணர்களை எழுப்புகிறார்.
பிரம்ம முகூர்த்த காலத்தில் எழுப்பத் தொடங்கியவர் ஆதித்யன் உதிக்கும் வரைக்கும் எழுப்பிக் கொண்டே இருக்கிறாராம். இரண்டு பேரும் எழுந்திருக்கவே இல்லை. உடனே கௌசல்யா சுப்ரஜா கௌசல்யா சுப்ரஜா என்று சொல்லிக் கொண்டே எழுப்பினாராம். "இன்று ஒரு நாள் இந்த தெய்வக் குழந்தையை எழுப்பும் பேற்றினை நான் பெற்றேன். ஆனால் தினமும் ராமனை எழுப்பும் கோசலை எனும் கௌசல்யா எத்தனை பேற்றினை பெற்றவள்". என்று மனதிற்குள் நினைத்தபடியே எழுப்புகிறாராம்.
அதனால் அவளை தொழுதவாறு ராமனை இவ்வாறு எழுப்புகிறார். "கோசலையின் தவப்புதல்வா ராமா! கிழக்கில் விடியல் வருகின்றதே! எழுந்திட்டு புலி போல் மனிதா செய்திடுவாய் இறை கடமை". இந்த கௌசல்யா சுப்ரஜா என்ற வார்த்தைகளைக் கொண்டு ஸ்ரீ ஹஸ்தகிரி அனந் தாசாரியலு என்பவர் எழுதினார்.அவர் எழுதிய அந்த பாடல்களை இன்னைக்கும் திருப்பதியில் எம் எஸ் சுப்புலட்சுமி அவர்களின் குரலில் பாடலாக ஒலிக்கிறது.