Kathir News
Begin typing your search above and press return to search.

பேச்சு வரம் தரும் உத்தமராயர் பெருமாள்

பேச்சு வரம் அருளும் உத்தமராயர் பெருமாள் ஆலயம் பற்றி காண்போம்.

பேச்சு வரம் தரும் உத்தமராயர் பெருமாள்
X

KarthigaBy : Karthiga

  |  1 Nov 2024 8:16 AM GMT

ஒருமுறை விவேகானந்தரைப் பார்த்து ஒருவர் கேட்டார். கடவுள் எங்கும் நிறைந்துள்ளானே! நாம் ஏன் கோவிலுக்கு செல்ல வேண்டும் என கேள்வி கேட்டார். உடனே அவரிடம் விவேகானந்தர் எனக்கு தாகமாக இருக்கு கொஞ்சம் குடிக்க தண்ணீர் வர முடியுமா ?என விவேகானந்தர் கேட்கவே கேள்வி கேட்ட நபர் ஒரு டம்ளரில் நீர் கொண்டு வந்து கொடுத்தார். அதை வாங்கிய விவேகானந்தர் நான் உங்களிடம் தண்ணீர் மட்டும் தானே கேட்டேன் ஏன் டம்ளரையும் கொண்டு வந்தீர்கள் என கேட்கவே கேள்வி கேட்டவர் திருதிருவென முடித்தார். இவ்வாறு தான் கடவுளை வழிபடுவதற்கும் அந்த சக்தியை உணர்வதற்கும் கோயில் சென்றால் தான் உணர முடியும்.

கோயில் பற்றி பல சிறப்புகள் இருந்தாலும் அதை உணர்ந்தால் தான் பலன்கள். இவ்வாலயத்தை பற்றி காண்போம். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே உள்ள அய்யம்பாளையம் கிராமத்தில் உள்ள ஊமைக்கு வாய் கொடுத்த உத்தமராயர் ஆலயத்தை காண்போம். அய்யம்பாளையம் கிராமத்தில் உள்ள மலைகளில் இருக்கும் குன்று அந்த கிராமத்தின் சிறுவர்கள் மாடு மேய்ப்பதற்காக மலைகளுக்கு சென்று விட்டு ஒரு குகையில் இளைப்பாறுவார்கள். மாடுகளை மேய விட்டு இதே மாதிரி குகையில் இளைப்பாறிக் கொண்டிருந்தான். அப்பொழுது அவனுக்கு உறக்கம் வரவில்லை .சட்றென்று ஒரு உருவம் பக்கத்தில் வந்து அந்த சிறுவன் தலையில் கை வைத்து நான் வந்திருக்கிறேன் என ஊருக்குள் போய் நீ சொல் அப்படின்னு அந்த பெரியவர் சொன்னார்.

உடனே அந்த சிறுவன் ஏதோ சக்தி வந்தது போல உணர்ந்து ஊருக்குள் ஓடி வந்து ஒரு பெரியவர் இங்கு வந்திருக்கிறார். எல்லோரும் வாருங்கள் என அழைத்தான். அந்த ஊர் மக்கள் பேசாத சிறுவன் பேசுகிறானே என அதிசயத்து அனைவரும் ஒன்று திரண்டு வந்தார்கள் .அந்த வயதானவர் சிறுவன் உருவத்தில் உத்தமராயப் பெருமாள் ஆக சங்கு, சக்கரம் ,அபய வர்ணம் ஆசிர்வாதத்துடன் காட்சி கொடுத்தார். வந்திருப்பது பெருமாள் தான் என உணர்ந்து ஊர் மக்கள் சிறுவனுக்கு குரல் கொடுத்ததற்காக ஊமைக்கு குரல் கொடுத்த உத்தமராயப் பெருமாள் என்ற பெயரிலேயே அந்த ஸ்தலம் விளங்குகிறது.

சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்பு இந்த ஸ்தலம் உருவானதாக வரலாறு. படை வீட்டை தலைநகரமாகக் கொண்டு ஆட்சி செய்த சம்பவராய மன்னர் கிபி 1236-1379 காலகட்டத்தில் விஜயநகர மன்னன் புக்கனின் மகனான குமாரகம்பனின் காலத்தில் கட்டப்பட்டது. இது அங்குள்ள தமிழ் கல்வெட்டுகளில் உத்தமகிரி பெருமாள் வேங்கட உடையார் பெருமாள் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த உத்தமகிரி வேங்கட உடையாருக்கு செவ்வாயும் புதனும் நாமகரணம் கொடுத்துள்ளது. இக்கோயிலில் பேச்சு வராத பிள்ளைகள், மூளை பாதிப்பு ஏற்பட்ட பிள்ளைகள் ஆட்டிசம் உள்ள பிள்ளைகள் ,பிறந்து தாமதமாக பேச்சு வரும் பிள்ளைகள் கோயிலுக்கு வந்து தேன் அபிஷேகம் செய்து அந்த அபிஷேக தேனை துளசி தொட்டு தடவினால் பேச்சு வரும் என்பது ஐதீகம்.

மேடை பேச்சாளர்கள் ,பாடகர்கள் இக்கோயிலுக்கு வந்து தேன் அபிஷேகம் செய்து தேனை எடுத்துச் சென்று தினமும் நாக்கில் தடவி வந்தால் பாடலும் பேச்சும் வரும். ஆட்டிசம் உள்ள குழந்தைகள் இக்கோயிலுக்கு வந்து தேனை சுவாமிக்கு படைத்து விட்டு ஒரு பெரியவர் கையில் தன் நாகக்கில் தடவி சென்றால் ஆட்டிசம் வெகு விரைவில் குணமாகி பேச்சும் மிக விரைவில் வரும். குழந்தை வரம் வேண்டுவோர் இங்கு துலாபாரம் வேண்டிக் கொண்டால் உடனே குழந்தைப்பேறு கிடைக்கும். புதன் நரம்புக்கு அதிபதி செவ்வாய் ரத்தத்திற்கு அதிபதி, நரம்பு ரத்த சம்பந்தமான பிரச்சனை உள்ளவர்கள் இக்கோவிலுக்கு வந்து சனிக்கிழமை அன்று முழுவதும் அங்கேயே இருந்து சுவாமிக்கு தேன் அபிஷேகம் செய்து ஒரு தேங்காயை உடைத்து இரண்டு முடிகளிலும் நெய் ஊற்றி விளக்கேற்றி வந்தால் இந்த ரத்த சம்பந்தப்பட்ட பிரச்சனையும் நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனையும் தீரும்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News