கார்த்திகை தீபப் பெருவிழாவில் பழைய விளக்குகளை பயன்படுத்தலாமா!
By : Sushmitha
கார்த்திகை மாதம் வந்தாச்சு சங்க இலக்கியங்களிலும் பெருவிழாவாக குறிப்பிடப்பட்டிருக்கின்ற விழா கார்த்திகை தீபம் கார்த்திகை மாதங்களில் வீட்டை சுத்தம் செய்து மண் விளக்குகளால் அலங்கரிப்பது வழக்கமான ஒன்று அதிலும் கார்த்திகை தீபம் பெருநாளில் 27 விளக்குகள் ஏற்றுவது ஐதீகமாகும்
ஏனென்றால் ஐதீகமாக சொல்லப்படுகின்ற 27 விளக்குகளும் 27 நட்சத்திரங்களை குறிக்கிறதாம் 27 விளக்குகள் ஏற்ற முடியாதவர்கள் குறைந்தது ஒன்பது தீபங்களை கூட ஏற்றலாம் என்று கூறுகின்றனர் அப்படி நம் வீட்டை அலங்கரித்து மண் விளக்குகளால் தீபம் ஏற்றும் பொழுது சகல சௌபாக்கியங்களும் வாழ்க்கையில் கிடைக்கும் என்பது ஒரு நம்பிக்கையாகும்
அந்த வகையில் கார்த்திகை தீபத்தன்று ஏற்றப்படுகின்ற அனைத்து விளக்குகளும் புதிதாக இருக்க வேண்டும் என்று அவசியம் கிடையாது நம் வீட்டின் தலைவாசலில் ஏற்றப்படுகின்ற இரு விளக்குகள் மட்டும் நிச்சயமாக புதிதாக இருக்க வேண்டும் மற்றபடி மற்ற அனைத்து விளக்குகளும் பழைய விளக்குகளாக இருக்கலாம் என்றும் அவற்றை சுத்தம் செய்து எந்த ஒரு விரிசல் இல்லாமலும் பார்த்து அந்த விளக்கை தீபத்திற்கு பயன்படுத்த வேண்டும்
அதுமட்டுமின்றி சுத்தம் செய்த அகல் விளக்குகளுக்கு மஞ்சள் குங்குமம் வைத்து அலங்கரித்து அதில் சுத்தமான நல்லெண்ணெய் அல்லது நெய் ஊற்றி விளக்கேற்ற வேண்டும் இப்படி விளக்கேற்றி ஜோதியின் கடவுளான சிவபெருமானை மனம் உருகி வேண்டினால் நிச்சயம் நன்மை ஏற்படும் என்பது நம்பிக்கையாகும்