Kathir News
Begin typing your search above and press return to search.

கார்த்திகை தீபத்திருநாளில் விளக்கு ஏற்றும்பொழுது கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயங்கள்!

கார்த்திகை தீபத்திருநாளில் விளக்கு ஏற்றும்பொழுது கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயங்கள்!
X

SushmithaBy : Sushmitha

  |  27 Nov 2024 6:41 PM IST

கார்த்திகை மாதம் தொடங்கியதில் இருந்து கார்த்திகை மாதத்தின் சிறப்புகளும் அம்மாதத்தில் நடைபெறும் சிறப்பான விஷயங்கள் குறித்தும் பார்த்து வருகிறோம் அந்த வகையில் கார்த்திகை மாதத்தில் கார்த்திகை நட்சத்திரமும் பௌர்ணமியும் இணைந்து வரக்கூடிய நன்னாளில் கோயில்கள் மற்றும் வீடுகளில் தீபம் ஏற்றி வழிபடுவர் அந்நாளில் தீபம் ஏற்றி வழிபடும் பொழுது நம்முடைய வாழ்வில் இருக்கின்ற இருளும் நீங்கி ஒளி பெருகும் என்பது ஒரு ஐதீகம்

அப்படிப்பட்ட தீபத்தை நம் வீட்டிலும் கோவில்களிலும் ஏற்றும் பொழுது ஒரு சில முறையையும் வழக்கத்தையும் பின்பற்ற வேண்டியது அவசியம் ஆகிறது ஏனென்றால் நாம் ஒரு விளக்கு ஏற்றும் முறை மூலமே அதற்கான பலன்கள் நம்மை வந்து அடையும் அதாவது நமது கஷ்டங்கள் அனைத்தும் விலக வேண்டும் என்றால் விளக்கை கிழக்கு நோக்கி ஏற்ற வேண்டும் அதேபோன்று மேற்கு திசை நோக்கி விளக்கு ஏற்றினால் நம்மிடம் இருக்கும் கடன் தொல்லையானது நீங்கும் மேலும் திருமண தடை நீங்குவதற்கு விளக்கை வடக்கு திசை நோக்கி ஏற்ற வேண்டும் ஆனால் தெற்கு திசையை நோக்கி மட்டும் விளக்கு ஏற்றக்கூடாது என்று கூறுகின்றனர் அதுமட்டுமின்றி கார்த்திகை மாதத்தில் தீப திருநாள் அன்று மாலை 5 மணி முதல் 5:30 மணிக்குள் வீட்டில் பூஜை அறையில் விளக்கு ஏற்றி வழிபட்ட பின் வீட்டு முழுவதும் தீபங்கள் ஏற்றுவதற்கு விளக்குகளை தயார்படுத்தி பிறகு திருவண்ணாமலையில் மகாதீபம் ஏற்றப்படுகின்ற அதே நேரத்தில் வீட்டின் வாசல் மற்றும் வீட்டின் மற்ற இடங்களில் விளக்குகளை ஏற்றுவது நல்லது என்பது நம்பிக்கையாகும்

இதைத் தவிர ஒரு முகத்தில் கொண்ட விளக்கை ஏற்றினால் நாம் நினைத்த காரியங்கள் நடக்கும் இரண்டு முகங்கள் கொண்ட விளக்கு ஏற்றினால் குடும்பம் ஒற்றுமையாகும் மூன்று முகம் கொண்ட விளக்கு ஏற்றப்படும் பொழுது புத்திர தோஷம் நீங்கும் நான்கு முகம் கொண்ட விளக்கு ஏற்றப்படும் பொழுது வீட்டில் உள்ள வறுமைகள் நீங்கி செல்வம் பெருகும் ஐந்து முகம் கொண்ட விளக்கை ஏற்றும் பொழுது சகல நன்மைகளும் கிடைக்கும் என்பது ஐதீகமாகும்

Next Story
கதிர் தொகுப்பு
Trending News