திருவண்ணாமலை தீபத்திருநாள்:நிம்மதி இன்மையை போக்க பூர்வ ஜென்ம பரிகார பூஜை!
By : Sushmitha
எது நடந்தாலும் மனதை தளர விடக்கூடாது சின்ன விஷயத்திற்கு அழுக கூடாது என பல அறிவுரைகளை சிலர் கேட்டாலும் சின்ன விஷயத்திற்கெல்லாம் அழுபவர்களும் ஒரு சின்ன தோல்வியை கூட தாங்க முடியாதவர்களும் பலர் உள்ளனர் அவர்களின் பலரை நம் வாழ்க்கையின் பயணத்தில் பார்த்திருக்கலாம் அல்லது தினந்தோறும் பார்த்து இருக்கலாம்
மேலும் இன்றைய கல்விமுறையில் ஏதேனும் சிறிய தோல்வி அல்லது நினைத்த மதிப்பெண்களை பெறவில்லை என்றால் கூட அபரிவிதமான முடிவுகளை எடுக்கின்றனர் மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்பதையே பலர் தற்போது அதிகமாக யோசித்து ஒரு நிம்மதியே இல்லாமல் வாழ்ந்து வருகின்றனர் இந்த பிரச்சனைகள் மட்டுமின்றி கடன் தொல்லை தொடர்ச்சியாக சரிவு நாள்தோறும் கண்ணீர் விடும் நிலை என அனைத்து நிம்மதி இன்மை பிரச்சனைகளுக்கும் தீர்வாக திருவண்ணாமலை அம்மணி அம்மன் கோவில் உள்ளது
திருவண்ணாமலையில் உள்ள அம்மணி அம்மன் கோவிலில் வீற்றிருக்கும் அம்மணி சுமார் 270 ஆண்டுகளுக்கு முன்பே தனி ஒரு பெண்மணியாக நின்று 171 அடி உயர பிரம்மாண்ட திருவண்ணாமலை வடக்கு கோபுரத்தைக் கட்டியவர் இவரின் மன தைரியமும் தன்னம்பிக்கையும் பலரையும் வியக்க வைக்க கூடிய ஒன்று மேலும் திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் முடிவில் ஈசனின் லிங்கத்திற்கு எதிராகவே ஜீவசமாதி அடைந்தவர் ஜீவசமாதி அடைந்து தற்போது அரூபமாக பக்தர்களில் நிம்மதி இன்மையை விரட்டி வருகிறார்
அதிலும் குறிப்பாக கார்த்திகை தீப நன்னாளில் திருவண்ணாமலையின் அம்மணி அம்மன் ஆலயத்தில் பூர்வ ஜென்ம பரிகார பூஜை நடைபெற உள்ளது அந்த பூஜையில் கலந்து கொண்டால் வாழ்வின் சகல சௌபாக்கியங்களை பெறலாம் என்பது சித்தர்களின் வாக்காகும் அதோடு இந்த பூஜையில் கலந்து கொள்பவர்கள் ஒவ்வொருவருக்குமே தூய அரசை இலை மீது மண்ணால் ஆன அகல் விளக்கு வைத்து நல்லெண்ணையில் விளக்கேற்றி நிம்மதியை வேண்டுபவர்கள் தங்கள் வேண்டுதல்களை முன்வைத்து வந்தால் நிச்சயம் அது பலனளிக்கும் என்று கூறுகின்றனர் வருகின்ற டிசம்பர் 13 ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று திருவண்ணாமலையின் அம்மணி அம்மன் கோவிலில் இந்த பூர்வ ஜென்ம பரிகார பூஜை நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது