தீராத நோய்களும் தீர வேண்டுமா?இந்த அம்மனை வந்து தரிசியுங்கள்!
வெவ்வேறு பெயர்களில் வெவ்வேறு ஊர்களில் வெவ்வேறு வடிவங்களில் வெவ்வேறு பின்னணியில் உருவான அம்மன்களின் வரலாறு அறிந்து கொண்டால் சிலிர்ப்பை ஏற்படுத்தும். அப்படி ஒரு கோவில் தான் கொல்லூர் மூகாம்பிகை அம்மன் ஆலயம்

ஆதிசங்கரர் முதன்முதலில் கொல்லூர் வந்தபோது கோல மகரிஷி என்பவர் வழிபட்ட சுயம்புலிங்கம் மட்டுமே இந்த இடத்தில் இருந்துள்ளது. இந்த லிங்கத்தில் அம்பாள் அருள் பாலித்ததை உணர்ந்த ஆதிசங்கரர் அதன் முன்பாக அமர்ந்து தியானம் செய்த போது அம்பாள் ஆதிசங்கரருக்கு காட்சி கொடுத்தார். அந்த உருவத்தை அடிப்படையாகக் கொண்டு மூகாம்பிகை அம்மன் சிலை பிரதிஷ்ட செய்யப்பட்டது. இந்த கோவிலில் அலங்காரம், புஷ்பாஞ்சலி, ஆராதனை ஆகியவை மட்டுமே நடைபெறும். அபிஷேகம் நடக்காது. எங்களால் லிங்கத்தின் நடுவில் ஒரு தங்க கோடு இருக்கும். லிங்கத்திற்கு அபிஷேகம் நடைபெறும் வேளையில் இந்த தங்க கோட்டை நாம் தரிசிக்கலாம்.
இந்த சிவலிங்கத்தின் இடதுபுறம் சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகியோரும் வலது புறம் லட்சுமி ,சரஸ்வதி ,பார்வதி ஆகியோரும் அருள்பாலிப்பதாக நம்பப்படுகிறது. அதே சமயம் இந்த லிங்கத்தை வணங்கினால் 33 கோடி தேவர்களையும் வழிடிபட்ட பலன் கிடைக்கும். பொதுவாக அனைத்து கோவில்களும் கிரகண நேரத்தில் நடை சாத்தப்படும் .ஆனால் இந்த கோவிலில் நடை சாத்தப்படுவதில்லை. அதே சமயம் கோவிலில் பூஜை செய்வதற்கு திருமணம் ஆகாதவர்களுக்கு அனுமதி கிடையாது. முன்பு ஒரு காலத்தில் மூகாசுரன் என்ற அரக்கன் சிவனை நோக்கி தவம் இருந்தான். அவனது தவத்தின் நோக்கம் நிறைவடைந்து விட்டால் உலகிற்கு துன்பம் ஏற்படும் என்பதால் தேவர்கள் அம்பிகையிடம் முறையிட்டனர் .
உடனடியாக மூகாசுரனின் தவத்தை கலைத்து அவனுடன் அம்பிகை போரிட்டால் இதில் அம்பிகையிடம் மூகாசுரன் சரண் அடைந்தார். இதனால் இந்த அன்னை மூகாம்பிகை என அழைக்கப்படுகிறாள். தொழிலில் வெற்றி பெற இத்தல அன்னைக்கு குங்கும அர்ச்சனை செய்கிறார்கள். நோய்களிலிருந்து விடுபட வடைநைவேத்தியம் செய்கின்றனர். கல்வியில் சிறந்து விளங்க மகா திரு மதுர நிவேதனம் செய்கிறார்கள் அதோடு இரவு 9:00 மணிக்கு ஸ்ரீ ஆதிசங்கரர் கூறிய முறைப்படி இஞ்சி, குறுமிளகு, ஏலக்காய் திப்பிலி, இலவங்கம்,வெல்லம் ஆகிய மருத்துவ மூலிகை பொருட்கள் சேர்த்த கசாயம் பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த கசாய தீர்த்தம் சகல நோய்களையும் குணப்படுத்தக் கூடியது என்கிறார்கள். இந்த கசாயத்தை அம்மனே தயாரிப்பதாக ஐதீகம். இந்த ஆலயமானது தினமும் காலை 5 மணி முதல் பகல் 1:30 மணி வரையும் பிற்பகல் 3 மணி முதல் இரவு 9 மணி வரையும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.