வரம் தருவாள் வாராங்கல் பத்மாட்சி!
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள வரலாற்று சிறப்பு வாய்ந்த வாரங்கல் நகரில் புகழ்பெற்ற கோவிலாக விளங்குவது வாரங்கல் ஸ்ரீ பத்மாட்சி மலைக்கோவில் ஆகும். அனைத்து மக்களும் வழிபடும் திருக்கோவில் இது.

காகத்திய மன்னர்கள் ஆட்சியில் கி.பி 12-ஆம் நூற்றாண்டில் எழுப்பப்பட்ட சமண சமய மலைக் கோயிலே பத்மாட்சி திருக்கோவிலாகும். காகத்தியர்கள் சமண மதத்தில் இருந்த போது இக்கோவில் உருவாக்கப்பட்டது. இப்பகுதி முழுவதும் சமண மதத்தவர்கள் நிறைந்து வாழ்ந்து வந்தனர். இப்பகுதி பாசாதி என்றே அழைக்கப்பட்டது. இக்கோவிலை பத்மாட்சி குட்டா என்றும் அம்மா என்றும் இப்பகுதி மக்கள் அழைக்கின்றனர் .இது பத்மாவதி தேவிக்கு என அர்ப்பணிக்கப்பட்ட திருக்கோவிலாகும். இதன் பிறகு காகத்திய மன்னர் இரண்டாம் பெத்தரா ராஜு சைவ சமயத்தை தழுவியதால் பத்மாவதி கோவிலாக மாற்றம் பெற்றது.
அதுபோல மக்களும் சமண மதத்தின் கடுமையான பழக்கவழக்கங்களை கடைபிடிக்க விரும்பவில்லை. அதனால் மக்களும் சைவ சமயத்தை தழுவினர். ஹனமகொண்டா மலை மீது சுமார் 1000 அடி உயரத்தில் இக்கோவில் எழிலாக காட்சி தருகிறது. மலையடிவரத்தில் அழகிய திருக்குள நீர் நிறைந்து காணப்படுகிறது. மலையேற எளிதான படிகள் அமைக்கப்பட்டுள்ளன. இது கோவிலின் குறிப்பிடத்த அம்சமாக அமைந்துள்ளதால் கருங்கல்லால் ஆனது. 'அண்ணா கொண்டா தூண் நாற்கர வடிவில் திகழ்கிறது .
நான்கு பக்கத்திலும் சமண சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளன. ஆலய கருவறை குகைக்குள் அமைந்துள்ளது. அதே கருவறையில் பெரிய தீர்த்தங்கர பர்வசநாதர் திருவுருவம் உள்ளது.வலது புறம் யட்ச தரனேந்திரனும் இடதுபுறம் பத்மாவதியும் அருள் பாலிக்கின்றனர். பாறையின் புடைப்புச் சிற்பங்களாக இவை அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. இவற்றின் திருமேனினியில் வண்ணங்கள் பூசப்பட்டுள்ளன .இது தவிர கருவறை சுற்றில் சமண தீர்த்தங்கரர் மற்றும் பிற சமண தெய்வங்களுக்கும் சிற்பங்கள் வடிக்கப்பட்டு அவற்றின் மீது வண்ணங்கள் பூசப்பட்டுள்ளன .
வலம் வரும் புகைப்பகுதியில் சிவலிங்கம் மற்றும் நந்தியின் சிலை வடிவங்கள் காணப்படுகின்றன. மலையடிவாரத்தில் லட்சுமி நரசிம்ம ஸ்வாமி கோவில் மற்றும் சித்தேஸ்வரர் கோவில்கள் இருக்கின்றன. இவ்வாலயம் மூலவரான அன்னை பத்மாட்சி காலையில் சிறுமி வடிவத்திலும் மதியம் இளம் பெண்ணாகவும் மாலையில் முதிய பெண் வடிவிலும் காட்சி தருகின்றாள். ஆண்டுதோறும் லட்சக்கணக்கானோர் கூடும் பதுக்கம்மா விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகின்றன .அந்த விழாவில் மலை அடிவாரத்தில் உள்ள குளத்தில் பெண் பக்தர்கள் ஏராளமான பூக்களை தூவி வணங்குவார்கள் இந்த ஆலயம் தினமும் காலை 6:00 மணி முதல் மாலை 6 மணி வரை தரிசனம் செய்வதற்காக திறந்திருக்கும். தெலுங்கானா மாநிலம் வாரங்கல் மாவட்ட தலைநகரான வாரங்கல் நகரில் இருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஹனமகொண்டா பகுதியில் அரணாக திகழும் மலை மீது இக்கோவில் அமைந்துள்ளது. ஹைதராபாத் நகரில் இருந்து 141 km தொலைவில் உள்ளது வாராங்கல்.