தோஷங்களைப் போக்கும் துத்திப்பட்டு பிந்து மாதவர்!
மாதவனை காண்பதற்கே மாதவம் செய்திருக்க வேண்டும் என்பது ஆன்மீக சான்றோர்களின் வாக்கு. அந்த மாதவன் தன் இரு தேவியர்களுடன் அருள் பாலிக்கும் ஆலயம் தான் திருப்பத்தூர் மாவட்டம் துத்திப்பட்டில் உள்ள பிந்து மாதவ பெருமாள் கோவில்.

தேவேந்திரன் தனக்கு ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷத்தில் இருந்து விமோசனம் பெற இவ்வுலகில் ஐந்து மாத பெருமாள்களை ஐந்து திவ்ய திருத்தலங்களில் நிறுவினான். முதலில் அலஹாபாத் நகரின் பிரயாகையில் வேணி மாதவரையும், இரண்டாவதாக ஆந்திர மாநிலம் பிட்டாபுரத்தில் குந்தி மாத வரையும், மூன்றாவதாக ஆம்பூருக்கு அருகே துத்திப்பட்டில் பிந்து மாதவரையும் நான்காவதாக திருவனந்தபுரத்தில் சுந்தர மாதவரையும் ஐந்தாவதாக இராமேஸ்வரத்தில் சேது மாதவரையும் நிறுவி வழிபட்டு ,பிரம்மஹத்தி தோஷம் நீங்கப்பெற்றான். இந்த ஐந்து மாத பெருமாள் கோவில்களுக்கும் யாத்திரை செல்பவர்களுக்கும் எல்லா விதமான பாவ சாப தோஷங்களும் நீங்க வேண்டுமென்று பெருமாளிடம் வரம் பெற்றான் கேட்டார். அதன்படியே திருமாலும் அருள்புரிந்தார்.
பின்னொரு சமயம் பஞ்சமாதவ பெருமாள் கோவில்களில் ஒன்றான துத்திபட்டுக்கு அருகே உள்ள நிமிஷாசில மலையில் சில முனிவர்களோடு தவம் புரிந்து வந்தார் ரோமமகரிஷி. அப்போது பிரதூர்த்தன் என்கிற கந்தர்வன் முனிவர்களின் தவத்திற்கு இடையூறு ஏற்படுத்தியதால் கோபம் கொண்ட ரோம மகரிஷி அவனை புலியாக மாற்றினார் சபித்தார். இதை அடுத்து புலியாக மாறிய கந்தர்வன். அக்காட்டில் வாழும் உயிரினங்களுக்கும் முனிவர்களுக்கும், முன்பை விடவும் அதிக துன்பங்களை கொடுத்தான். இதை அடுத்து ரோம மகரிஷி மகாவிஷ்ணுவை பிரார்த்தனை செய்தார்.
அவரும் இந்திரனை அனுப்பி வைத்தார். இந்திரன் நிமிஷாசல மலையை அடைந்து ரோம மகரிஷியை வணங்கி புலி உருவில் இருந்த கந்தர்வனுடன் போரிட்டு அவனை வதம் செய்தார்.பிரதுர்த்தன் உயிர்பிரியும் தருணத்தில் மன்னிப்பு வேண்டிட திருமால் காட்சி தந்து அவனுக்கு நற்கதி அளித்தார். அதோடு ரோம மகரிஷிக்கும் காட்சி தந்த பிந்து மாதவர் அவருக்கு மோட்சம் அளித்து தன்னுடன் சேர்த்துக் கொண்டார். கந்தர்வனின் வேண்டுகோளின்படி இந்த தலம் பிரதூர்த்தப்பட்டு என்று அழைக்கப்பட்டு .நாளடைவில் துத்திப்பட்டு என்று ஆனது. இந்த ஆலயம் ஐந்து நிலை ராஜகோபுரத்துடன் அமைந்துள்ளது.
உள்ளே நுழைந்தால் பலிபீடம் ,தீபஸ்தம்பம், கொடிமரம் ,கருடாழ்வார் தொடர்ந்து 36 தூண்களைக் கொண்ட முக மண்டபம் அதைக் கடந்தால் மகா மண்டபம் உள்ளது. மகா மண்டபத்தில் விஷ்வக்சேனர், ராமானுஜர் ,பன்னிரு ஆழ்வார்கள் ரோம மகரிஷி ஆகியோரும் அர்த்தமண்டபத்தில் உற்சவ திருமேனிகளும் உள்ள. கருவறையில் பிந்து மாதவப் பெருமாள் சங்கு சக்கரம் ஏந்தி கதாயுதத்துடன் அபய வரத முத்திரை காட்டி அருள் பாலிக்கிறார். சுமார் 6:30 அடி உயரம் கொண்ட இந்த பெருமாளின் இருபுறமும் ஸ்ரீதேவி மற்றும் பூதேவி தாயார்கள் உள்ளனர்.
தல விருட்சமாக அத்திமரம் உள்ளது.தல தீர்த்தமாக சீரநதி எனப்படும் பாலாறு சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.வருடா வருடம் காணும் பொங்கல் அன்று நடைபெறும் பாரிவேட்டை உற்சவத்தில் பெருமாள் நிமிஷாசல மலைக்கு எழுந்தருளி ரோம மகரிஷிக்கு காட்சியளிக்கும் திருவிழாவானது வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. வருகிறது. திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் இருந்து குடியாத்தம் செல்லும் சாலையில் அமைந்துள்ளது இந்த ஆலயம்.