Kathir News
Begin typing your search above and press return to search.

பொள்ளாச்சி நகரின் காவல் தேவதையாக மாரியம்மன்!

பொள்ளாச்சி நகரின் காவல் தேவதையாக கருணை மிகுந்தவளாக விளங்கும் மாரியம்மன் வீற்றிருக்கும் ஆலயத்தைப் பற்றி காண்போம்.

பொள்ளாச்சி நகரின் காவல் தேவதையாக மாரியம்மன்!
X

KarthigaBy : Karthiga

  |  1 March 2025 10:09 PM IST

பொள்ளாச்சி நகரின் காவல் தேவதையாக மாரியம்மன் கோவில் உள்ளது. அனைத்து உயிரினங்களையும் கருணை நிறைந்து அல்லும் பகலும் காத்து நின்று அருளாட்சி புரிந்துவரும் உலகநாயகியாக அன்னை மாரியம்மன் போற்றப்படுகிறாள். முன்பு ஓடுகள் வேய்ந்த ஒரு சிறு கோயிலாக இருந்தது. தற்போது லட்சக்கணக்கான பக்தர்களை தன்பால் ஈர்த்துள்ளது.உயர்ந்த பீடத்தில் வடக்கு நோக்கி அமர்ந்து அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

கொடி மரத்தை வணங்கி உள்ளே நுழையும்போது இடது புற விநாயகரையும் வலதுபுறம் முருகனையும் பெண் காவல் தெய்வங்களையும் காணலாம். கருவறையை சுற்றி வலம் வரும்போது உள்ள மண்டபத்தில் அழகிய செப்பு படிமங்கள் உள்ளன.கிழக்கு நுழைவாயிலின் வழியாக சென்றால் விசாலமான மண்டபத்தை அடையலாம். தொடர்ச்சியாக அங்காள பரமேஸ்வரி அம்மன் அருள் பாலிக்கிறார். இவரு அன்னைகளின் அற்புத இருப்பிடமானதால் கோவிலுக்கு 'அருள்மிகு மாரியம்மன் அங்காளம்மன் கோவில் 'எனப் பெயர் பெற்றது .

அங்காளம்மனுக்கு திறந்தவெளியே அவள் விமானம்.திருப்பணியின்போது விமானம் எழுப்ப உத்தரவு கேட்டபோது அன்னையின் அனுமதி கிடைக்க வில்லையாம். அதாவது அன்னையின் விண்முட்டி நிற்கும் அருளாட்சியை கட்டுக்குள் கொண்டு வருவதை அவள் விரும்பவில்லை என்பது தெளிவாகிறது. சிறப்புமிக்க இந்த கோயிலின் மாசி பெருந்திருவிழா தற்போது நடைபெறுகிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News