தஞ்சையில் தரிசனம் தரும் சிவ- விஷ்ணு ஆலயம்!
தஞ்சை மாநகரில் உலக பிரசித்தி பெற்ற ராஜராஜேஸ்வரம் எனும் பத்தாம் நூற்றாண்டில் இந்த பெரிய கோவில் உள்ளது.

தஞ்சை மாநகரில் உலக பிரசித்தி பெற்ற ராஜராஜேஸ்வரம் எனும் பத்தாம் நூற்றாண்டில் எழுந்த பெரிய கோவில் உள்ளது.அதற்கு முன்பு எட்டாம் நூற்றாண்டில் உள்ளது. உள்ளது. உள்ளது. ஆண்ட வித்யாலய சோழன் வழிபட்ட நிசும்பசூதனி கோவில் இன்று ராகு, கால வடபத்ரகாளி என்ற பெயரில் கீழவாசல் பகுதியில் கோவிலாக விளங்குகிறது. ஏழாம் நாட்டில் வாழ்ந்த திருமங்கை ஆழ்வாரும் நம்மாழ்வாரும் மங்களாசாசனம் செய்த மணிக்குன்ற பெருமாள், நீலமேகப்பெருமாள், வீர நரசிம்ம பெருமாள் கோவில்களும் திவ்ய தேசங்களாக தஞ்சையின் வட எல்லை வென்றாற்றங்கரையில் திகழ்கின்றன.
அருகில் தஞ்சை எனப் பெயர் வரக் காரணமான தஞ்சபுரீஸ்வரர் சிவலிங்கமாக மேற்கு நோக்கி ஒரு ஆலயத்தில் காட்சி தந்து அருள் பாலிக்கிறார்.இவைகளைத் தவிர் தஞ்சையை பதினாறாம் பாரம்பரிய நாயக்கர்களும் அதன் பின் மராட்டிய மன்னர்களும் அரண்மனை அமைத்து ஆண்ட போது ராஜ வீதி தோறும் சைவ வைணவ ஆலயங்களை நூற்றுக்கணக்கில் அமைத்து வழிபட்டனர். காசி விஸ்வநாதர் ,காமாட்சி அம்மன் கலியுக வெங்கடேச பெருமாள் பாமா ருக்மணி சமேத கிருஷ்ணமூர்த்தி, யோக நரசிம்மர், வாயு மூலையில் வாயுபுத்திரரான ஆஞ்சநேயர், சக்கரத்தாழ்வார் மணிகர்ணிக ஈஸ்வரன் கோவில் போன்ற கோவில்கள் இன்றும் பொலிவோடு வழிபடுகின்றன.
தஞ்சையின் காவல் தெய்வங்களாக கிழக்கில் புன்னைநல்லூர் மாரியம்மனும், வடக்கில் கோடியம்மனும், மேற்கில் செங்கமல அம்மனும் கோவில்களில் அருள்பாலிக்கின்றனர்.அவற்றில் பெரியகோவிலுக்கு அருகாமையில் உள்ள சங்கரநாராயணர் கோவிலில் அரியும் அரனும் சேர்ந்த உருவத்தின் இருபுறமும் விஷ்ணுவின் மனைவி லட்சுமியும் சிவனின் மனைவி பார்வதியும் காட்சி தருவது சிறப்பு. இவையெல்லாம் நூற்றாண்டுகளை கடந்த நிலையில் தஞ்சை புது ஆற்றங்கரையில் 2004 ஆம் ஆண்டு நிறுவப்பட்டு தற்போது சிறப்புடன் விளங்கி வருவது தான் சிவா-விஷ்ணு ஆலயம். இவ்வாலயத்தின் மமதிற்சுவரில் கருடனும் நந்தியும் வரிசைகட்டி காட்சி தருகிறார்கள். கோவிலின் உள்ளே நுழைந்தவுடன் தனி கருவறையில் நின்ற கோலத்தில் சங்கு சக்கரம் ஏந்திய திருமாலும் அருகே லக்ஷ்மி தேவியும் அமர்ந்த கோலத்தில் காட்சி தருகின்றனர். அவர்களுக்கு எதிரே பெரிய திருவடி என்னும் கருடன் கைகூப்பிய படி நிற்கிறார். ஆஞ்சநேயர் இங்கே தனி சன்னதி கொண்டு உள்ளார். விஷ்ணு கோவிலின் இடதுபுறம் தனி சன்னதியில் காசி விஸ்வநாதர் என்ற பெயரில் சிவலிங்கமாக ஈசன் அருள்கிறார்.மற்றொரு தனிச்சன்னதியில் காசி விசாலாட்சி தென்திசை நோக்கி வீற்றிருக்கிறார். தஞ்சை ரயில் நிலையம் அருகே உள்ள இவ்வாலயம் தினமும் காலை இருவேளையும் தரிசனத்திற்காக நடை திறந்து வைக்கப்பட்டிருக்கும்.