கேட்ட வரங்களை அள்ளித்தரும் 'பாலாம்பிகை' ஆலயம்
தென்னிந்தியாவில் உள்ள புகழ்பெற்ற அம்மன் ஆலயங்களில் ஒன்றாக கருதப்படும் பாலாம்பிகை அம்மனை பற்றி காண்போம்.
By : Karthiga
இந்து மதத்தில் வழிபாடு செய்யப்படும் ஒரு பெண் தெய்வம் ஆவார். இவரது கோயில், தென்னிந்தியாவில் உள்ள தமிழ்நாட்டில் உள்ளது. இவருடைய பெயருக்கு "அறிவின் தெய்வம்" அல்லது "குழந்தை தேவி" என்று பொருள் அளிக்கப்படுகிறது.பாலம்பிகாவின் விளக்கம் குறித்து, புராண நூலில் பாலம்பிகா தசகம் காணப்படுகிறது. இவர், நான்கு கைகள் உடையவராகவும், ஒவ்வொரு உள்ளங்கையிலும் சிவப்பு வட்டம் கொண்டவராக ஓளிப்படங்களில் காணப்படுகிறார்.
இவர், ஒரு புனிதமான பாடப்புத்தகத்தையும் ஒரு ஜபமாலையையும் தன் இரண்டு கைகளில் வைத்திருப்பவராக பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். பாலாம்பிகா ஒரு குழந்தையாகக் கருதப்படுகிறார். மேலும் ஒரு சிறந்த வாழ்க்கைக்கு தேவையான உண்மையான அறிவு, கல்வி, ஞானம், சக்தி மற்றும் செழிப்பு ஆகியவற்றை தருபவராக உள்ளார் என்று கூறப்படுகிறது. இவர், சில சமயங்களில் குழந்தைகளின் தெய்வம் என்று அழைக்கப்படுகிறார். ஆகவே, இவருடைய கோயில் குழந்தைகளுக்கு அர்ப்பணிக்கும்படி கட்டப்பட்டது.
இந்தியாவிலுள்ள, தமிழ்நாட்டின் அரியலூர் மாவட்டத்தில் காமராசவள்ளியில் பாலம்பிகாவுக்கு ஒரு கோயில் உள்ளது. இது சுமார் 1000–2000 ஆண்டுகள் பழமையானது எனக் கருதப்படுகிறது. இக்கோயிலின் சுவர்களில் சிற்பங்கள் காணப்படுகின்றது. மேலும், கார்கோடகன் என்கிற நாகர்களின் அரசன், விநாயகர் மற்றும் நந்தியுடன் சிவ பூசை (சிவன் வழிபாடு) செய்யும் கதையைக் குறிப்பிடும் சிற்பங்கள் இங்கு உள்ளது. மேலும், 1950ம் ஆண்டில் காஞ்சி மடத்தைச் சேர்ந்த மகா பெரியவர் என்று அழைக்கப்படும் சந்திர சேகர சுவாமிகள் இங்கு வந்து கார்கோடேசுவரருக்கும் பாலாம்பிகைக்கும் அபிசேக, ஆராதனை செய்து வழிபட்டதாக கோயில் குறிப்பு காணப்படுகிறது.
பன்னிரெண்டு இராசி சக்கரத்தில் ஒன்றான, கடகம் இராசி மற்றும் கடக லக்கினத்தில் பிறந்தவர்கள், தங்கள் வாழ்க்கையில் நலம் பெற்று வாழ இங்கு வந்து பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று கூறப்படுகிறது. மேலும், நாக தோஷம் உடையவர்களின் பரிகாரத் தலமாகவும் இக்கோயில் உள்ளது. இங்கு வந்து கார்கோடேசுவர் - பாலாம்பிகாவை வழிபாடு செய்வதன் மூலம், திருமணத் தடை நீங்கும் எனவும், குழந்தைப் பேறு மற்றும் நல்ல வாழ்க்கை அமையப்பெறும் எனவும் இக்கோயிலின் தல வரலாறு குறிப்பிடுகிறது.