Kathir News
Begin typing your search above and press return to search.

பிதுர் தோஷம் நீக்கும் பஞ்ச பைரவர்

சில மனிதர்கள் எவ்வளவுதான் முயற்சி உடையவர்களாக இருந்தாலும் திறமையானவர்களாக இருந்தாலும் சரியான வாய்ப்புகள் அமையாமல் முன்னேற்றம் ஏற்படாமல் இருப்பார்கள். அப்படிப்பட்டவர்கள் சென்று வணங்க வேண்டிய ஒரு சிறப்பான ஸ்தலம் தான் பிதுர்தோஷம் நீக்கும் பஞ்சபைரவர் ஸ்தலம்.

பிதுர் தோஷம் நீக்கும் பஞ்ச பைரவர்

KarthigaBy : Karthiga

  |  4 Nov 2022 1:00 AM GMT

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் இருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது ஆவூர் திருத்தலம். இங்கு பசுபதீஸ்வரர் ஆலயம் இருக்கிறது. இங்கு சிவபெருமான் பசுபதீஸ்வரர் என்ற திருநாமத்துடனும் அம்பாள் பங்கஜவல்லி என்று திருநாமத்துடனும் அருள்பாலித்து வருகிறார்கள். வசிஷ்ட முனிவரால் சாபம் பெற்ற காமதேனும் என்ற வானிலக பசு பூமிக்கு வந்து இறைவனை பூஜித்து சாப விமோசனம் பெற்ற இடம் இந்த திருத்தலம் ஆகும் எனவேதான் இத்தலம் ஆவூர் என்றானது. 'ஆ' என்பது பசுவை குறிக்கும்.


இந்த ஆலயத்தின் மற்றொரு சிறப்பம்சம் பஞ்சபைரவ மூர்த்திகள் இங்கு ஐந்து பைரவர்களும் ஒரே பீடத்தில் வீற்றிருக்கிறார்கள். இவர்களை தேய்பிறை அஷ்டமி தினத்தில் வழிபாடு செய்தால் அனைத்து துன்பங்களும் நீங்கும். பஞ்சபைரவ வழிபாடு என்பது பிதுர் தோஷ நிவர்த்திக்கு சிறந்ததொரு வழிபாடு ஆகும். பிதுர் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் உள்ளவர்கள் இந்த பைரவரை வழிபாடு செய்து வந்தால் உடனடியாக பலன் கிடைக்கும் .ஒரு சிலர் நிறைய சம்பாதிப்பார்கள் இருந்தாலும் கடன் தீராது. இன்னும் சிலருக்கு நல்ல திறமைகள் இருக்கும். ஆனால் சரியான வேலையும் வாய்ப்புகளும் அமையாமல் வருமானம் இன்றி இருப்பார்கள். பல பேர் அனைத்து செல்வங்களையும் பெற்று இருப்பார்கள். ஆனால் வாழ்வில் நிம்மதி இருக்காது. அப்படிப்பட்டவர்களின் அந்த நிலைக்கு பிதுர் தோஷம் தான் காரணம். அவர்கள் அனைவரும் இத்ல பஞ்ச பைரவர்களை வழிபட்டு பிதுர் தோஷத்தை போக்கி வாழ்வில் வளம் பெறலாம்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News