Kathir News
Begin typing your search above and press return to search.

ஐந்துவித நன்மைகளை வழங்கும் பஞ்சமுக விஸ்வரூப ஆஞ்சநேயர்!

ஐந்து விதமான நன்மைகளை வழங்கும் பஞ்சமுக விஸ்வரூப ஆஞ்சநேயர் அமைந்துள்ள திருத்தலம் பற்றி காண்போம்.

ஐந்துவித நன்மைகளை வழங்கும் பஞ்சமுக விஸ்வரூப ஆஞ்சநேயர்!

KarthigaBy : Karthiga

  |  6 Feb 2024 4:30 AM GMT

திருவள்ளூர் பெரியகுப்பம் ,ராஜாஜிபுரம் தேவி மீனாட்சி நகரில் 40 அடி உயரத்தில் ஒரே பச்சைக்கல்லால் ஆன விஸ்வரூப பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் அமைந்துள்ளது . பெங்களூர் ஆர்சன் மடப்பகுதியில் இருந்து கொண்டு வந்து இங்கு நிறுவப்பட்டதாகும் . கோவிலில் ஒவ்வொரு மாதமும் மூல மந்திரஹோமம் நடைபெற்று வருகிறது. அனுமன் ஜெயந்தி மற்றும் முக்கிய விழாக்காலங்களில் 40 அடி உயரம் உள்ள விஸ்வரூப பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு வடமாலை சாற்றி சிறப்பு அபிஷேகம் செய்யப்படும். இந்த விஸ்வரூப பஞ்சமுக ஆஞ்சநேய ஸ்வாமியின் பஞ்ச முகங்களும் வழிபடும் பக்தர்களுக்கு பலவிதமான நன்மைகளையும் வளங்களையும் வழங்கும் சக்தி கொண்டது .


கிழக்கு நோக்கியபடி இருக்கும் ஆஞ்சநேய சுவாமியின் முகம் பாவங்களை நீக்கி தூய்மையான மனதை கொடுக்கும் .தெற்கு நோக்கி அமைந்த நரசிம்ம சுவாமியின் முகம் எதிரிகள் மீதான பயத்தை நீக்கி வெற்றியை பெற்றுத் தரும். மேற்கு நோக்கி இருக்கும் மகாவீர கருட சுவாமியின் முகம் பில்லி, சூனியம், ஏவல் ஆகியவற்றால் ஏற்படக்கூடிய தீய விளைவுகளை போக்கும் .வடக்கு நோக்கிய லட்சுமி வராக சுவாமியின் முகம் கிரக தோஷங்களை போக்கி அஷ்ட ஐஸ்வர்யங்களை அழிக்கும். எல்லாவற்றுக்கும் மேலாக மேல்நோக்கியபடி அமைந்துள்ள ஹயக்ரீவர் சுவாமியின் முகம் சுபிட்சமான வாழ்வையும் கல்வி, தொழில் பயிற்சி , கணவன் மனைவி ஒற்றுமை ,புத்திர பாக்கியம் போன்றவற்றை நல்கும்.


இந்த 48 அடி உயரம் உள்ள விஸ்வரூப பஞ்சமுக ஆஞ்சநேயரை வழிபட செவ்வாய் மற்றும் சனிக்கிழமை உகந்த நாட்கள் ஆகும் .கோவில் காலை 6 மணி முதல் நண்பகல் 12 மணி வரையும் மாலை 4:30 மணி முதல் இரவு 8 மணி வரையும் பக்தர்களின் தரிசனத்திற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும். சென்னையில் இருந்து சுமார் 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது இந்த ஆஞ்சநேயர் திருத்தலம். ரயில் மார்க்கத்தில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து அரக்கோணம் திருத்தணி மார்க்கத்தில் திருவள்ளூர் ரயில் நிலையத்தில் இறங்க வேண்டும். ரயில் நிலையத்திற்கு அருகாமையில் இந்த கோவில் அமைந்திருக்கிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News