Kathir News
Begin typing your search above and press return to search.

மங்கள வாழ்வு தரும் பங்குனி உத்திரம்!

ரவிக்காக மன்மதனே சிவபெருமான் உயிர்ப்பித்த எழுப்பித்த தந்த நன்னாள் தான் பங்குனி உத்திரம் தெய்வத்திருமணங்கள் நடைபெற்ற இந்த திருநாளின் சிறப்புகள் பற்றி காண்போம்

மங்கள வாழ்வு தரும் பங்குனி உத்திரம்!
X

KarthigaBy : Karthiga

  |  13 March 2023 7:45 AM GMT

வாழ்க்கை வளமாக இருக்க எதையேனும் ஒன்றை நாம் நம்புகின்றோம்.அந்த நம்பிக்கையை நாம் பங்குனி மாதத்தில் முருகன் மீது வைக்க வேண்டும். நம்பினார் கெடுவதில்லை. நான்கு மறை தீர்ப்பு என்பது முன்னோர்கள் வாக்கு. கண்ணனின் கருணையை நாம் அளவிட்டுச் சொல்ல முடியாது. அழுது தொழுதவருக்கு அப்பொழுதே அருள் கொடுக்கவும் பொருள் கொடுக்கவும், காத்திருப்பவன் முருகப்பெருமான் சண்முக கவிராயருக்கும், சிவகாமசுந்தரி அம்மையாருக்கும் மகனாக பிறந்த குமரகுருபர சுவாமிகள் பிறவியிலேயே ஊமையாக இருந்தார்.


உற்றார் உறவினர்கள் அவரை 'ஊமைபிள்ளை' என்று கூறுவதை கேட்டு பெற்றோர்கள் மனம் வாடினர் . குறைகளை குமரனிடம் கூறி திருச்செந்தூருக்கு மகனை அழைத்துச் சென்று அங்குள்ள சண்முக விலாச மண்டபத்தில் தங்கி விரதம் இருந்து செந்தில் ஆண்டவரை வழிபட்டனர் . திடீரென ஒரு நாள் நல்ல உறக்கத்தில் இருந்த பெற்றோரை பார்த்து 'அம்மா' என்று வாய் திறந்து அழைத்தான் சிறுவன் குமரகுருபரன். ஊமைக்குழந்தை பேசியதை கண்ட பெற்றோர்கள் வியந்த இது கனவா? இல்லை நினைவா? என்று திகைத்தனர்.


திருச்செந்தூர் வேலவனே வேலால் நாவில் எழுத நூலாயிரம் பாடி பணிந்தார் குமரகுருபரர். அந்த நேரத்தில் குமரகுருபரர் பாடிய பாடல் தான் கந்தர் கலிவெண்பா. அங்கனம் நம்பிக்கைக்கு பாத்திரமாக விளங்கும் கந்தனை பங்குனி உத்திரத்தன்று முழு நாளும் விரதம் இருந்து வழிபட்டால் முன்னேற்றங்கள் எண்ணில்லாத அளவு வந்து சேரும் முருகனுக்கு ஆறுமுகங்கள் உண்டு. எனவேதான் அவனை ஆறுமுகம் என்கிறோம். சீரும் முகம் கொள்ளாமல் சிரிக்கும் முகம் பெற்றவன் குமரன். அப்படிப்பட்ட ஆறுமுகத்திற்கு 12 காதுகள் உண்டல்லவா ?அந்த 12 காதுகளும் எவை எவற்றையெல்லாம் கேட்க காத்திருக்கின்றது என்று முத்துக்குமாரசாமி திருவருட்பாவில் சிவஞான தேசிகர் அழகாக விளக்கியுள்ளார்.


தாயின் சொல்லை கேட்பதற்கு ஒரு காது

தந்தையின் சொல்லை கேட்பதற்கு ஒரு காது

மாமனாகிய திருமால் சொல்லை கேட்பதற்கு ஒரு காது

ஆனைமுகம் சொல்லை கேட்பதற்கு ஒரு காது

நவ வீரர்களின் சொல்லை கேட்பதற்கு ஒரு காது

பிரம்மனின் துதி கேட்க ஒரு காது

விண்ணவர்க்கு அரசனான இந்திரன் சொல் கேட்பதற்கு ஒரு காது

தெய்வானை சொல் கேட்பதற்கு ஒரு காது

வள்ளி சொல் கேட்பதற்கு ஒரு காது

அசுரர்கள் சொல் கேட்பதற்கு ஒரு காது

மறை துதிக்கு ஒரு காது

அடியவர்கள் சொல் கேட்க ஒரு காது

இப்படி உனது 12 செவிகளையும் வைத்துக்கொண்டு எனது சொல்லைக் கேளாமல் இருக்கலாமா? எனது குறைகளை எவரிடம் நான் முறையிட வேண்டும் ? பாலமுத்துக்குமரா என்று அழகாக எடுத்துரைப்பார் . பங்குனி 21ஆம் தேதி 04-04- 2023 செவ்வாய்க்கிழமை பங்குனி உத்திர திருவிழா அந்நாளில் கந்தபெருமானை வழிபட்டால் செல்வநிலை உயர்ந்து சிறப்பான வாழ்வு அமையும்.


பங்குனி உத்திர திருநாள் தான் முருகன் தெய்வானை திருமணம் நடைபெற்ற நாள் என்பார்கள். அதேபோல் ராமர் சீதை திருமணமும் நடைபெற்றது. சுந்தரேஸ்வரரை மீனாட்சி மணந்து கொண்டதும் இதே நாளில் தான் என்று புராணங்கள் கூறுகின்றன. இவ்வளவு சிறப்பு மிக்க நாளில் இறைவனை வணங்கி நாமும் எல்லா வளங்களையும் பெறுவோம்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News