Kathir News
Begin typing your search above and press return to search.

இராமாயணத்தின் இடம்பெற்ற புனித இடங்கள் இன்று என்ன பெயரில் விளங்குகின்றன ?

இராமாயணத்தின் இடம்பெற்ற புனித இடங்கள் இன்று என்ன பெயரில் விளங்குகின்றன ?
X

Kanaga ThoorigaBy : Kanaga Thooriga

  |  30 Oct 2021 12:30 AM GMT

நம் இதிகாசங்களில், புராணங்களில் வரும் பல ஊரின் பெயர்கள் இன்று என்னவாக இருக்கும் என்கிற ஆர்வம் நம்மில் பலருக்கும் இருக்கும். அவ்வாறே, நம் இராமாயணத்தில் வரும் இடங்கள் இன்றைய நடைமுறையில் எங்குள்ளன, தற்போது அவை எந்நிலையில் உள்ளன என்கிற தேடுதல் நம்முள் எழுந்ததன் விளைவாக, இணையத்தின் உதவியுடன் இராமாயணத்துடன் தொடர்புடைய ஒரு சில இடங்கள் இன்று எவ்வாறு உள்ளன என்பதை இங்கே தொகுத்துள்ளோம்.

நாசிக், மும்மையிலிருந்து வடக்கிழக்கில் 5 மணி நேர பிராயண தூரத்தில் அமைந்திருக்கும் நகரம். இராமர் அவருடைய வனவாசத்தின் போது சில காலம் இங்கே தங்கியிருந்தார் என்கின்றன குறிப்புகள். அதுமட்டுமின்றி இலக்குவணன் சூர்பனகையின் நாசியை அறுத்ததும் இங்கே தான் எனவே இந்நகரிற்கு நாசிக் என பெயர் வந்தது என்ற புராண கதையும் உண்டு. இந்த நகரம் கோதாவரி நதிக்கரையில் அமைந்து, இந்நதி பாய்ந்தோடி வங்காள விரிகுடா சமுத்திரத்துடன் கலக்கிறது.

இந்நகரில் கும்பமேளா நடப்பது வழக்கம், இதற்கான காரணங்களுள் ஒன்றாக இந்த இராமாயண தொடர்பும் கருதப்படுகிறது. இங்கிருக்கும் ராம குண்டம் மிகவும் பிரசித்தி பெற்றது. இங்கே இராமரும் சீதையும் நீராடினர் என்கின்ற குறிப்புகள். அதனாலேயே இந்த தீர்த்தம் மிகுந்த புனிதத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

ராமேஸ்வரம், இராமாயணத்துடன் தொடர்புடைய இடங்களில் மிக முக்கியமானது. இராமா என்ற பெயர் எழுதி கற்கள் நீரில் மிதந்து, அந்த மிதக்கும் கற்காலாலே இலங்கைக்கு பாலம் அமைத்த அற்புத இடம். இந்த கோவிலின் அருகினில் இலட்சுமண தீர்தம் மற்றும் இராம தீர்த்தம் ஆகிய இடங்கள் உண்டு. அதிலும் இத்தலத்தில் அமைந்துள்ள கோடி தீர்த்தம் என்பது, ஶ்ரீ ராமர் எரிந்த அம்பினால் ஊற்று உருவாகி தீர்த்தமாக உருமாறியது என்பர். அதுமட்டுமின்றி போர் முடிந்து திரும்பிய ஶ்ரீ ராமர் தான் ஏதேனும் பாவங்களுக்கு ஆட்பட்டிருப்பின் அவை நீங்க இங்குள்ள ஜடா தீர்த்தத்தில் நீராடியதாக வரலாறு.

ஹம்பி ( விஜயநகர்) விஜயநகர பேரரசின் வலிமை மிகு தலைநகராக ஒரு காலத்தில் திகழ்ந்த நகரம். இந்நகரம் இத்தாலியின் ரோம் நகரை விட ஒரு படி உயர்ந்தது என புகழப்படும் நகரமாகும். ஒரு காலத்தில் அரை கோடிக்கும் அதிகமான மக்கள் இந்நகரில் வசித்துள்ளனர். பெரும் காலாள் படையை கொண்டிருந்த சிறப்பு வாய்ந்த இந்நகரத்தில் தான் ஶ்ரீ ராமர் அனுமரை முதன் முதலாக சந்தித்தார் என்பது வரலாறு.

இன்னும் இது போல ஏராளமான நகரங்கள் துங்கபத்ரா நதிக்கு 5 கி.மீ வடக்க்கில் அமைந்துள்ள கிஸ்கிந்தை, இன்று இதை அனென்குடி என அழைக்கின்றனர் அனுமரையும், சுக்ரீவனையும் ஶ்ரீராமர் சந்தித்த இடம். மேலும் இராமாயணத்தில் குறிப்பிடப்படும் ரிஷிமுக பர்வதமும் இந்த பகுதியில் தான் அமைந்துள்ளது என சொல்லப்படுகிறது.

Image : HansIndia

Next Story
கதிர் தொகுப்பு
Trending News