Kathir News
Begin typing your search above and press return to search.

நவராத்திரி வழிபாட்டில் கடைபிடிக்க வேண்டிய முறைகள்

நவராத்திரி வழிபாட்டில் பெண்கள் பின்பற்ற வேண்டிய வழிபாட்டு முறைகள் பற்றி காண்போம்.

நவராத்திரி வழிபாட்டில் கடைபிடிக்க வேண்டிய முறைகள்
X

KarthigaBy : Karthiga

  |  13 Oct 2023 6:15 AM GMT

சுகமான வாழ்வு வேண்டும். கல்வியில் சிறந்து விளங்க வேண்டும். வேலையில் மேன்மேடைய வேண்டும் .எந்த தொழிலில் ஈடுபட்டாலும் வெற்றி மீது வெற்றி பெற வேண்டும் என்று நினைப்பவர்கள் அனைவரும் நவராத்திரி பூஜையை அவசியம் செய்ய வேண்டும். நவராத்திரியின் ஒன்பது நாட்களும் வாசலில் மாவிலை கட்டி பூஜை செய்தால் வீட்டில் செல்வ செழிப்பு பெருகும். தினம் தோறும் நவராத்திரி பூஜையில் நிறைவாக மஞ்சள் ,குங்குமம், தாம்பூலம், புத்தாடை போன்ற பலவிதமான மங்களப் பொருட்களை தானமாக அளிக்க வேண்டும். நவராத்திரி பூஜை நாட்களில் வரும் வெள்ளிக்கிழமைகளில் 5 சுமங்கலி பெண்களுக்கு அன்னதானம் செய்து புடவை மற்றும் தாம்பூலம் கொடுத்து ஆசி பெற்றால் கன்னிப் பெண்களுக்கு திருமண பாக்கியம் விரைவில் கைகூடும்.


நவராத்திரி நாட்களில் பகலில் சிவ பூஜையும் இரவில் அம்பிகைபூஜையும் செய்வதே சரியான வழிபாடாகும். நவராத்திரி நாட்களில் பெண்கள் கன்னியா பூஜை செய்வதால் சகல செல்வங்களையும் பெறலாம். நவராத்திரியின் ஒன்பது நாட்களும் பகலில் 1008 சிவன் நாமாவளிகளை உச்சரித்து வழிபட்டால் மனதில் நினைக்கும் பலன்கள் கிடைக்கும். நவராத்திரி பூஜைக்கான ஸ்லோகங்கள் மந்திரங்கள் எதுவும் தெரியவில்லையா கவலை வேண்டாம். 'ஓம் ஸ்ரீ லலிதா தேவியே நம' என்பதை 108 தடவை சொன்னாலே போதும் . நினைத்த பலன் கிடைக்கும் . புரட்டாசியில் வரும் நவராத்திரியை நாம் கொண்டாடுகிறோம் .ஆனால் ஆண்டுதோறும் நான்கு விதமான நவராத்திரிகள் வரும்.


பங்குனி மாதம் அமாவாசைக்கு பிறகு பிரதமையில் தொடங்கும் லலிதா நவராத்திரி .மாசி மாதம் வரும் ராஜமாதங்கி நவராத்திரி. ஆடியில் வரும் மகா வராகி நவராத்திரி. புரட்டாசியில் வரும் சாரதா நவராத்திரி ஆகியவை ஆகும். இந்த நான்கு நவராத்திரிகளையும் முறையாக கடைபிடிக்கும் பெண்கள் அம்பிகையின் அருளை பரிபூரணமாக பெறலாம். அதற்கு வாய்ப்பில்லாதவர்கள் புரட்டாசி நவராத்திரியை பக்தியுடன் கடைபிடிக்கலாம்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News