Kathir News
Begin typing your search above and press return to search.

வளம் தரும் வழிபாட்டு முறைகள்!

எந்த மாதிரியான வழிபாட்டு முறைகளை மேற்கொண்டால் குடும்பத்தில் வளங்கள் பெருகி சுபிட்சம் நிலவும் என்பதை பற்றி காண்போம்.

வளம் தரும் வழிபாட்டு முறைகள்!

KarthigaBy : Karthiga

  |  21 Sep 2023 6:15 PM GMT

* சிவன் கோவிலில் இருக்கும் தல விருட்சங்களுக்கு சக்தி அதிகம். சிவாலயத்தில் இருக்கும் வன்னி மரம் அல்லது வில்வ மரத்தை 21 முறை வலம் வந்து நமது பிரச்சனைகளை தெரிவித்தால் நல்ல பலன் கிடைக்கும். வழக்குகளில் தீர்ப்புகள் சாதகமாக அமையும். ஆலய தல விருட்சங்களுக்கு நாம் கூறுவதை கேட்கும் சக்தி இருப்பதாக ஐதீகம் உண்டு.


* இரண்டு சர்ப்பங்கள் இணைந்தது போல் இருக்கும் நாகராஜ சிலைக்கு வெள்ளிக்கிழமை காலை ராகுகால வேளையில் மஞ்சள் மற்றும் குங்குமம் வைத்து செவ்வரளி பூ சூட்டி அபிஷேகம் செய்து வழிபட வேண்டும். மேலும் தீபம் ஏற்றி தம்பதியரின் பெயருக்கு அர்ச்சனை செய்து வழிபட தம்பதியர்கள் இடையே ஒற்றுமை அதிகரிக்கும்.


* குடும்பத்தில் தாங்க முடியாத கஷ்டங்கள் வந்தால், மன அமைதி குறைந்தால் நீங்கள் இருக்கும் இடத்திற்கு அருகில் உள்ள ஆலயத்திற்கு சென்று தீபம் ஏற்றி வழிபட்டால் அது சரியாகும். இது ரிஷிகள் கூறிய எளிய பரிகாரமாகும்.


* அதிக கடன் பிரச்சனையில் அவதிப்படுபவர்கள் யோக நரசிம்மரையும், லட்சுமி நரசிம்மரையும் வழிபடுவது நல்ல பரிகாரமாகும். நரசிம்மரின் எந்த திருக்கோலத்தை தரிசித்தாலும் கடன் தொல்லை, பில்லி, சூனியம் , ஏவல், கண் திருஷ்டி , திருமண தடை போன்றவை விலகும். இது தவிர திருஷ்டி , செய்வினை போன்றவை நீங்குவதற்கு ஆலயத்தில் உள்ள திரிசூலத்தில் குங்குமம் இட்டு எலுமிச்சம் பழத்தை குத்தி வைத்து வழிபடலாம்.


* பிரதோஷ காலத்தில் ரிஷப வாகனத்தில் அருளும் அம்பாளையும் ஈசனையும் வழிபாடு செய்தவர்கள் ஆயிரம் அஸ்வமேத யாகம் செய்த பலனை பெறுவார்கள். அதிலும் ஈசானிய மூலையில் சிவபெருமானுக்கு தீபாரதனை காட்டும்போது தரிசனம் செய்தால் நோய்களும் வறுமையும் நீங்கும். மாதந்தோறும் உத்திர நட்சத்திரத்தன்று சிவனுக்கு பாலபிஷேகம் செய்து வழிபட்டால் விரைவில் திருமணம் நடந்தேறும் . இந்த பரிகாரத்தை தொடர்ச்சியாக 11 மாதங்கள் செய்ய வேண்டும் .


* சக்கரத்தாழ்வார் சன்னதியில் தொடர்ச்சியாக 48 நாட்கள் நெய் தீபம் ஏற்றி வைத்து 12 முறை வலம் வந்து வழிபாடு செய்தால் தொழிலில் விருத்தி ஏற்படும்.


* 21 செவ்வாய்க்கிழமைகளில் நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் வராமல் இருக்கும் கடன் தொகை வசூல் ஆகும். கொடுத்த கடன் வசூலாக பைரவர் சன்னதியில் தொடர்ந்து எட்டு செவ்வாய்க்கிழமைகளில் நெய் தீபம் ஏற்றி சகஸ்ரநாம அர்ச்சனையும் செய்யலாம்.


இவை அனைத்தும் வாழ்வில் வளங்களை அதிகரிக்க செய்யும் வழிபாட்டு முறைகள் ஆகும்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News