Kathir News
Begin typing your search above and press return to search.

மங்கள வாழ்வு தரும் ராகு பகவான்!

நவகிரகங்களில் மங்களமான வாழ்வு தரும் ராகு பகவானே வணங்கும் முறை பற்றி காண்போம்.

மங்கள வாழ்வு தரும் ராகு பகவான்!

KarthigaBy : Karthiga

  |  5 Oct 2023 5:00 AM GMT

சந்திரனையும் சூரியனையும் பலம் இழக்கும்படியாகவும் ஒளி குன்றும் படியாகவும் கட்டுப்படுத்த மாற்றும் சக்தி கேதுவிற்கு உண்டு. ராகுவிற்கு எந்த வீடும் சொந்தமில்லை. அதாவது எந்த ராசியும் ராகுவிற்கு சொந்தமாக இல்லை. ராகு எந்த ராசியில் இருக்கின்றாரோ எந்த கிரகத்தினால் பார்க்கப்படுகின்றாரோ எந்த இடத்தில் சேர்க்கப்பட்டுள்ளார்களோ அந்த இடத்தின் பலன்களை முழுமையாக தருவார் . ஒருவர் அந்த ஜாதகத்தில் அனுகூலம் தரும் நல்ல இடத்தில் ராகு இருந்து விட்டால் அந்த நபருக்கு நல்ல மனைவி, நல்ல வேலைக்காரர் , ஆட்சி மற்றும் செல்வாக்கு ஆகியவை அமையும்.

பல்வேறு மொழிகளில் தேர்ச்சி பெறுவதற்கும் ராகுவே காரணமாகிறார். மருந்து வேதியியல் நூதன தொழில்நுட்ப கருவிகள் ஆகியவற்றுக்கும் அவ்வப்போது மாறிவரும் நவ நாகரிகத்திற்கும் ராகு உடன் இணைந்த சுக்கிரன் காரணமாக அமைகிறார். அரசியல் செல்வாக்கு ஆற்றல் உரிமை போன்றவற்றிற்கும் ராகுவின் அனுகிரகம் நிச்சயம் தேவை. அனுகூலராகு கீழான ஒருவரை சக்கரவர்த்தியாக மாற்றும். வலிமை படைத்தவர் மந்திரஜாலம் கண்ணு கட்டி வித்தை போன்றவர்களும் ராகுவின் அனுகிரகத்தால் தன் கைவரப் பெறும்.

ராகு ஒருவரை குபேரபுரிக்கு அழைத்துச் செல்வார். தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் இருந்து ஆறு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது திருநாகேஸ்வரம். இங்கு நாகநாத சுவாமி கோவில் உள்ளது. ராகு பகவான் சிவபெருமானை பூஜித்த சிறப்பு மிக்க தலம் இது. அதனால் தான் இந்த தலத்தை திருநாகேஸ்வரம் என்று அழைக்கிறார்கள். சுசில முனிவரின் பிள்ளையை அரவாகிய ராகு ததீண்டியது. இதனால் ராகுவிற்கு சாபம் ஏற்பட்டது. இந்த சாபம் நிவர்த்தி பெற நான்கு தங்களை வழிபட்டு முடிவில் திருநாகேஸ்வரத்தில் உள்ள நாகநாத சுவாமியை மகா சிவராத்திரி நாளில் வழிபட வேண்டும் .

அதன்படியே ராகு பகவான் நாகநாத சுவாமியை வழிபாடு செய்து சாபம் நீங்க பெற்றார். அத்தோடு இத்தல சிவபெருமான் ராகுவுக்கு ஒரு வரத்தையும் அளித்தார். இத்தளத்திற்கு வந்து என்னை வழிபடும் பக்தர்கள் உன்னையும் வணங்கினால் உன்னால் ஏற்படக்கூடிய காலசர்ப்பதோஷம், சர்பதோஷம், களத்திர தோஷம் , புத்திர தோஷம் ஆகியவை நீங்கும் என்று அருளினார். அதன்படி ராகு பகவானும் இந்த ஆலயத்தில் மங்கள ராகுவாக நாக கன்னி மற்றும் நாகவல்லி ஆகிய இரு தேவியருடன் நிருதி மூலையில் அமர்ந்து தன்னை வணங்கும் பக்தர்களுக்கு தோஷங்களை நீக்கி அருள் பாலிக்கிறார்.

பல்வேறு தோஷங்களால் பாதிக்கப்பட்டவர்கள் இத்தல சூரிய புஷ்கரணியில் நீராடி நாகநாத சுவாமியை வழிபட்டு பின்னர் ராகுவை வழிபட்டால் தோஷங்கள் நீங்கி நன்மை கிடைக்கும். இந்த ஆலயத்திற்கு தமிழ்நாடு மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்தும் எண்ணற்ற பக்தர்கள் வந்து பாலபிஷேகம் செய்து வழிபட்டு செல்கின்றனர் . ராகு கேது பெயர்ச்சி நடைபெறும் நாட்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும் கலந்து கொண்டால் அதற்கேற்ற பலன்கள் கிடைக்கும்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News