Kathir News
Begin typing your search above and press return to search.

இவர்களெல்லாம் ஒரு காலத்திலும் செல்வந்தர்களாகவே முடியாது சொல்கிறது ராமசரித்தம்

இவர்களெல்லாம் ஒரு காலத்திலும் செல்வந்தர்களாகவே முடியாது சொல்கிறது ராமசரித்தம்

G PradeepBy : G Pradeep

  |  4 April 2021 12:16 AM GMT

இராமசரித்தம் என்பது காவிய காதை. இதில் ஶ்ரீ ராமராலும், ராமாயணமும் நமக்கு சொல்கிற பாடங்கள் அடங்கியுள்ளன. இதில் ஒரு தனிமனிதன் தன் வாழ்நாளில் கடைப்பிடிக்க வேண்டிய அறம் சார்ந்த சிந்தனைகள், நடைமுறைப்படுத்த வேண்டிய நல்லொழுக்கங்கள் எடுத்து கூறப்பட்டுள்ளன.

இந்த பாடங்கள் யாவும் நமக்கு பகவான் லட்சுமணரின் திருமொழியாக கிடைக்கபெற்றுள்ளது. அந்த வகையில், எதை செய்தால் பணக்காரர்களாகவும் செல்வந்தர்களாகவும் ஆகலாம் எனும் குறிப்புகள் பல இடங்களில் சொல்லப்பட்டிருந்தாலும், யாரெல்லாம் செல்வம் மிக்கவர்களாக ஆக முடியாது என்பதை எடுத்து சொல்கிறது இராமசரித்தம்.

இங்கே செல்வம் என்பது பணம் என்கிற அளவில் மட்டும் புரிந்து கொள்ள கூடாது. பல தவறுகளை செய்பவர் இடத்தில் அளவுகடந்த செல்வம் உண்டு. ஆனால் அதனை ஆனந்தத்துடன் அனுபவிக்கும் மனநிலை அவர்களுக்கு உண்டா என்பது கேள்வி. அந்த வகையில் பின்வரும் செயலை செய்பவர்கள் மனநிறைவு நிறைந்த செல்வந்தர்களாக இருக்க மாட்டார்கள் என்று இராமசரித்தம் சொல்கிறது.

யாரொருவர் போதை பொருட்களுக்கு அடிமையாக இருக்கிறார்களோ அவர்களால் செல்வந்தர்களாக இருக்க முடியாது. அவர்களிடம் இலட்சுமி தேவி தங்க மாட்டார். அடுத்து தன்னுடைய துணைவர் அல்லது துணைவியருக்கு துரோகம் இழைக்கும் ஆண் அல்லது பெண் ஆகியோரிடம் செல்வம் தங்காது.

எப்போது பணத்தை மட்டுமே கண்ணாக கொண்டு, அறம் அன்பு ஆகியவற்றை புறம் தள்ளி பணத்தின் பின் பெரும் பேராசை கொண்டு ஓடுகிறார்களோ அவர்களிடம் மனநிம்மதி அளிக்க கூடிய செல்வம் தங்காது. அடுத்து ஆணவம் அகங்காரம் நிறைந்தவர்களிடம் பணம் தங்காது. காரணம், அவர்கள் வெற்றியை நோக்கி செல்கிற போதெல்லாம் அவர்களின் அகந்தையினாலே அந்த வாய்ப்பை இழப்பார்கள்

பணம் யாரிடம் தங்காது என்பதை மாத்திரம் அல்ல. இராமாயணம் இன்னும் பல விலைமதிக்க முடியாத படிப்பினைகளை நமக்கு கற்று தருகிறது. அடிப்படையில் இராமாயணம் என்கிற காதை மற்ற இடங்களில் இருந்து மாறுபடும் முக்கிய இடம், உறவுகளுக்கான மரியாதையில். வேறெந்த காப்பியமும் இந்த அளவிற்கு உறவிற்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை.


பெரும்பாலும் இராமர் இலட்சுமணர் சகோதர பாசம், இராமர் சீதை கணவன் மனைவி அன்பு ஆகியவற்றை மட்டுமே பேசும் சூழலில், இராமருக்கும் இலட்சுமணருக்கு இருந்த அன்னை – மகன் அன்பு, ஊர்மிளைக்கும் இலட்சுமணருக்கு இடையே நிகழ்ந்த தியாகம், பரதன் தன் ஶ்ரீராமர் கொண்டிருந்த சகோதரத்துவம் என ஏராளமான உறவு சார்ந்த படிப்பினைகள் இதில் அடங்கியுள்ளன.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News