Kathir News
Begin typing your search above and press return to search.

நவராத்திரி திருவிழாக்களை தான் ஸ்ரீ சக்கரத்தை தரிசிக்க முடியும்: அப்படி என்ன சிறப்பு?

ராமேஸ்வரம் கோவிலில் நவராத்திரி திருவிழாக்களின் போது மட்டும் பக்தர்களின் தரிசனத்திற்காக வைக்கப்படும் ஸ்ரீ சக்கரம்.

நவராத்திரி திருவிழாக்களை தான் ஸ்ரீ சக்கரத்தை தரிசிக்க முடியும்: அப்படி என்ன சிறப்பு?

Bharathi LathaBy : Bharathi Latha

  |  28 Sep 2022 2:21 AM GMT

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில் நவராத்திரி திருவிழா தொடங்கியதை தொடர்ந்து கொலுசு மண்டபத்தில் அபூர்வ தங்க ஸ்ரீ சக்கரத்தை சிறப்பு பூஜை நடந்தது. இராமேஸ்வரம் ராமநாத கோவிலில் இந்த ஆண்டின் நவராத்திரி திருவிழா காப்பு கட்டுதலுடன் நேற்று நல்ல முறையில் தொடங்கியது. இன்று காலையில் கோவிலின் அம்பாள் சன்னதி பிரகாரத்தில் அமைக்கப்பட்டுள்ள கொலுசு மண்டபத்தில் அம்பாளின் அபூர்வ தங்க விக்கிரகத்திற்கு பால், பன்னீர், இளநீர், திரவியம், மாபொடி, மஞ்சள் பொடி, சந்தனம் உள்ளிட்டவைகளால் அபிஷேக ஆராதனை மற்றும் சிறப்பு தீப ஆராதனையை நடைபெற்றன.


நேற்று இரவு பார்வதி அம்மாள் அன்னபூரணி அலங்காரத்தில் கொலுசு மண்டபத்தில் எழுந்து வரும் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். ராமநாதா ஸ்வாமி கோவில் ஆண்டுகளுடன் நடைபெறும் நவராத்திரி திருவிழாக்களின் போது ஒன்பது நாட்கள் அம்மாவின் தங்க ஸ்ரீ சக்கரம் பக்தர்களின் பார்வைக்காக வைக்கப்பட்டு அபிஷேகம் செய்து பூஜை நடைபெறும் வழக்கம். அம்பாளியின் தங்க சுரசக்கரம் என்பது அம்பானி சொரூபமாகவே கருதப்படுகிறது.


ஸ்ரீ சக்கரத்திற்கு செய்யப்படும் பூஜையானது நேரடியாக அம்பாளுக்கு செய்யப்படுவதாகவும் பக்தர்கள் நம்பிக்கை கூறுகிறார்கள். ஒன்பது நாட்கள் பூஜை முடிந்த பின்னர் அம்பாள் பல்வேறு சக்தி அவதாரங்களுடன் எடுத்து, கொடிய அரக்கனை வதம் செய்வதாகவும் கூறப்படுகிறது. ராமேஸ்வரம் கோவிலில் ஆண்டுதோறும் நவராத்திரி திருவிழா நடைபெறும் பொழுது இந்த ஒன்பது நாட்கள் மட்டும்தான் இந்த தங்க ஸ்ரீ சக்கரம் பக்தர்களின் பார்வைக்காக இந்த மண்டபத்தில் வைக்கப்பட்டு வழிபாடு செய்யப்படும் குறிப்பிடத்தக்கது.

Input & Image courtesy: Oneindia News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News