Kathir News
Begin typing your search above and press return to search.

குழந்தைகளுக்கு மொட்டை எடுக்கும் பழக்கம்: முன்னோர்கள் ஏற்படுத்தியதன் பின்னணி!

குழந்தைகளுக்கு மொட்டை போடும் பழக்கத்தை முன்னோர்கள் ஏற்படுத்திய காரணம்?

குழந்தைகளுக்கு மொட்டை எடுக்கும் பழக்கம்: முன்னோர்கள் ஏற்படுத்தியதன் பின்னணி!
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  12 April 2022 1:34 AM GMT

நம் முன்னோர்கள் கடைப்பிடித்து வந்த ஒவ்வொரு விஷயத்திலும் அறிவியல் ரீதியான நன்மை தரும் காரணம் இருக்கிறது. இதை அடிப்படையாக வைத்து தான் பாரம்பரியமான சடங்கு முறைகள் பின்பற்றப்பட்டன. அதில் ஒன்று தான் மொட்டை அடிப்பது. பிறந்த பச்சிளம் குழந்தைக்கு ஒரு வருடத்திற்குள் மொட்டை அடிக்கவில்லை என்றால் 'சாமி குத்தம்' ஆகிவிடும் என்று பெரியவர்கள் சொல்லக் கேட்டதுண்டு. பெரும்பாலானோர் இதை குலதெய்வத்திற்காகச் செய்யப்படும் நேர்த்திக்கடன் என்றும், குடும்ப வழக்கம் என்றும் நினைத்து செய்கிறார்கள்.


பிறந்த குழந்தைகளுக்கு ஒரு வயதிற்கு முன் மொட்டை அடிப்பதை இந்து மதத்தைச் சார்ந்தவர்கள் திருவிழாவாகக் கொண்டாடி வருகின்றனர். குழந்தை பிறந்த ஒரு வருடத்தில் குழந்தையின் தாய்மாமன் அல்லது தாயின் தந்தையின் மடியில் வைத்து மொட்டை அடிப்பதை வழக்கமாக வைத்துள்ளனர். ஆனால் இதற்கு பின்னால் உள்ள அறிவியல் காரணம் இதுதான். தாயின் கருப்பையில் உள்ள பனிக்குடத்தில் ஒன்பது மாதங்கள் குழந்தை வளரும். அந்த நீர் ரத்தம், மலம், சலம் மற்றும் தண்ணீரால் நிறைந்தது.


அந்த நீரில் ஊறிப்போய் இருக்கும் குழந்தையை வெளியே வந்ததும் துணியால் துடைத்து சுத்தம் செய்து விடுகிறோம். ஆனால் தலையில் உள்ள கழிவுகள் அப்படியே தான் இருக்கும். அதை நாம் மொட்டை அடித்துத்தான் போக்க முடியும். மொட்டை அடிப்பதன் மூலம் அந்த திரவமானது மயிர்க்கால்களின் ஊடாக தலையிலிருந்து எளிதில் வெளியேறிவிடும். இதன் மூலம் கிருமிகளால் தொற்று, ஒவ்வாமை போன்ற பிரச்சினைகள் வருவது குறையும். குழந்தையின் மண்டை ஓட்டுத்தோலில் உள்ள தொற்றுகள், பூஞ்சை பாதிப்புகள் ஆகியவை மொட்டை அடிப்பதன் மூலம் நீங்குகின்றன. இதனால் குழந்தையின் முடி வளர்ச்சி அதிகரிக்கும். குழந்தையின் உடலையும், தலையையும் குளிர்ச்சியாக வைத்திருக்க உதவும். எனவே குழந்தைகள் தலையில் உள்ள கழிவு வெளியேற தான் இப்படி முன்னோர்கள் செய்துள்ளார்கள்.

Input & Image courtesy: Malaimalar news

Next Story
கதிர் தொகுப்பு
Trending News