Kathir News
Begin typing your search above and press return to search.

அரச மரத்தை சுற்றி வந்து வழிபடுவதற்கான ஆச்சர்ய காரணம் இது தானா?

அரச மரத்தை சுற்றி வந்து வழிபடுவதற்கான ஆச்சர்ய காரணம் இது தானா?

Kanaga ThoorigaBy : Kanaga Thooriga

  |  28 Jan 2022 12:31 AM GMT

எங்கும் இருப்பவர் எதிலும் இருப்பவர் கடவுள் என்பதை உணர்த்தும் வகையில், நம் மரபில் கடவுளர்களின் திருவுருவம் தவிர்த்து நாம் பயன்படுத்தும் ஆயுதம், புத்தகம், வீடு, வண்டி அனைத்தையும் தெய்வமாக மதித்து போற்றும் பழக்கம் உள்ளது. அதனால் தான் ஆயுத பூஜை, புதிய வீடு வாகனம் ஆகியவை வாங்கும் போது அவற்றிற்கு பூஜை செய்கிறோம். அந்த வரிசையில் குறிப்பிட்ட சில தாவர வகைகள் உதாரணமாக, துளசி, வில்வம் போன்றவைகளின் வரிசையில் வேப்ப மரம், வில்வ மரம் போன்றவையோடு அரச மரமும் வழிபாடுக்குரியதாகிறது.

அரச மரம் குறித்து சொல்லப்படும் நம் புராணக்குறிப்புகளின் படி, பிரம்ம தேவர் அரச மரத்தின் வேர்களில் இருப்பதாகவும், அதன் தண்டில் மஹா விஷ்ணுவும், அதன் இலைகளில் சிவபெருமானும் இருக்கிறார் என்பது ஐதீகம். அதுமட்டுமின்றி கிருஷ்ண பரமாத்மாவின் அம்சமாகவே இந்த மரம் பார்க்கப்படுகிறது.

கர்ப்பிணி பெண்கள், பிள்ளை வரம் வேண்டுபவர்கள் இந்த மரத்தை சுற்றி வருவதை கண்டிருப்போம். நம் முன்னோர்கள் எதையும் காரண காரியத்தோடே செய்தார்கள். மற்ற மரங்களை காட்டிலும் இந்த மரம் அதிக ஆக்ஸிஜனை வெளியேற்றுகிறது. அதுமட்டுமின்றி, இரவு நேரங்களில் பொதுவாக மரங்கள் கார்பன் டை ஆக்ஸைடை வெளியிடும். ஆனால் இந்த மரம் மாலையில் கூட ஆக்ஸினை வெளியிடுகிறது. இது மனித உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் ஏற்றது என்பதால் இந்த மரத்தை சுற்றி வர சொன்னார்கள்.

பிரம்மபுராணத்தின் படி மஹா விஷ்ணுவும், இலட்சுமி தேவியும் இந்த மரத்தின் தண்டில் வாசம் செய்வதால், இந்த்அ மரத்திற்கு நீர் உற்றி சனிக்கிழமைகளில் வழிபடுவது பல நன்மைகளை கொடுக்கும் என்து நம்பிக்கை. அதுமட்டுமின்றி பல பரிகாரங்கள் கூட அரச மரத்தை முன் வைத்து சொல்லப்படுவதை கண்டிருப்போம். அது நம் ஆரோக்கியத்திற்கு நன்மை தருவதே ஆகும். ஒருவர் அரச மரத்தை வழிபடுவதன் மூலம் பெயர், புகழ், சகல விதமான செல்வங்களையும் அடைவார்கள் என்பது நம்பிக்கை.

டஇத்தனை நல்ல விஷயங்களும் இருப்பதாலேயே விநாயக பெருமான் பல கோவில்களில் அரச மரத்தின் அடியில் அமர்ந்திருப்பதை காணலாம்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News