இறைவனுக்கு நிகராக பாம்புகள் வழிபடப்படுவது ஏன்? ஆச்சர்ய உண்மை!
By : Kanaga Thooriga
பாம்பை விரும்புபவர்களாக இருந்தாலும் சரி, அதை கண்டு அஞ்பவர்களாக இருந்தால்லும் சரி அது ஒரு ஐந்தறிவு உயிரினம் என்பதை தாண்டி நம் மரபில் அதற்கென ஆன்மீக முக்கியத்துவம் உண்டு. பாம்புகள் என்பது நம் மரபில் ஓரு குறியீடு, ஒருவரின் ஞானம், ஞானமடைதல், நல்ல ஆற்றல் இன்னும் பலவற்றை குறிக்கிறது.
இந்த பிரபஞ்சத்தின் ஆற்றலிலிருந்து உருவான அனைத்து உயிரினங்களும் மனித குலத்திற்கு ஒவ்வொரு பொருளை தருகின்றன. கீதையில் சொல்வதை போலே, "அறியாமையினால் மட்டுமே மனிதர்கள் வலியை அனுபவிக்கிறார்கள். இல்லையெனில் இங்கே துயரடைய எதுவும் இல்லை "
கடவுள் படைத்த உயிரனங்களிலே மனித இனம் மட்டுமே கடவுள்த் தன்மையை அடையும் ஆற்றல் பெற்றது. ஆன்மீக ரீதியில் மனிதர்களுக்கு அடுத்த ஆன்மீகத்தன்மையை பெறும் உயிரனமாக பாம்புகள் கருதப்படுகிறது.
இதற்கு பின் ஒரு புராணக்கதை உண்டு. பாற்கடலை கடைந்த போது அதிலிருந்து பொங்கிய விடத்தை சிவபெருமான் உண்டார். அப்போது அவரோடு சேர்ந்து பாம்புகளும் அந்த விடத்தை உண்டனராம். இதை கண்ட சிவபெருமான் அவர்களின் பக்தியில் சிலிர்த்து, எப்போதெல்லாம் பாம்புகள் வழிபடப்படுகின்றனவோ அப்போதெல்லாம் அந்த வழிபாடு என்னையும் வந்தடையும் என்ற வரத்தை அவர்களுக்கு அருளினார் என்பது புராணம்.
குண்டலினி ஆற்றலின் குறியீடு தான் பாம்புகள் என்றும் சொல்லப்படுவதுண்டு. சிலர் கனவுகளில் பாம்புகளை பார்த்தால் அவர்களின் ஆன்மீக வாழ்கையில் கவனம் செலுத்த வேண்டும் என்பது அறிகுறியாக இருக்கலாம்.
சுவாரஸ்யமாக கனவுகளில் பாம்பு ஒருவரை துரத்துவதை போல கனவு கண்டால் அவருக்கு நல்ல ஆற்றல் பின் தொடர்கிறது என்பது அறிகுறியாகும். இது குறித்து அவர் கவலைப்படவே தேவையில்லை. ஆனால் அதுவே ஒருவருடன் சண்டையிடுவதை போல கனவு கண்டால் அது உகந்ததல்ல
ஆன்மீக சாதனாவில் இருப்பவர்களை பொருத்தவரை கனவுகளில் பாம்புகள் வந்தால் அவர்களின் உணவு, பழக்க வழக்க, ஆரோக்கியம் இவற்றின் மீது கவனம் செலுத்த வேண்டும் என்று பொருள்.
பாம்புகள் கடிப்பது போல கனவு கண்டால் அது உணர்வு ரீதியாக ஏதேனும் காயம் நமக்கு ஏற்படலாம் என்பது அறிகுறியாக இருக்கலாம்.
இவையனைத்தும் ஒரு கையேடு போன்றவை மட்டுமே. இந்த அர்த்தங்கள் ஒவ்வொரு தனிமனிதரின் நம்பிக்கைக்கும், குணாதிசயங்களுக்கும் ஏற்றவாறு மாறுப்படும்.