Kathir News
Begin typing your search above and press return to search.

கோள்களால் பிரச்சனையா? சங்கடங்கள் நீங்க கோளறு பதிகம் சொல்லுங்க

கோள்களால் பிரச்சனையா? சங்கடங்கள் நீங்க கோளறு பதிகம் சொல்லுங்க
X

G PradeepBy : G Pradeep

  |  16 March 2021 12:15 AM GMT

பழங்காலத்திலிருந்தே நவகிரகங்களை வழிபடும் பழக்கம் இந்தியர்களிடம் இருந்திருக்கிறது. வெகு சில ஆண்டுகளுக்கு முன்பு தான் மேற்கத்திய உலகம் சந்திரனையும் செவ்வாயையும் ஆராய துவங்கியிருக்கிறது. 1900 களுக்கு பிறகு தான் பூமிக்கும் சந்திரனுக்குமான தொலைவை வெளியிட துவங்கினார்கள். ஆனால் நாம் 5000 ஆண்டுகளுக்கு முன்பே நவகிரகத்தை வழிபட தொடங்கினோம்.



நம்முடைய இந்து மரபு படி பூமி என்பது உருண்டையானது அனைத்து கிரகங்களும் அதனை சுற்றி வருகின்றன. இதனாலேயே நம் கோவில்களில் நவகிரகங்களை வைத்து வணங்கினோம். இதில் திருஞானசம்பந்தர் அருளிய கோளறு பதிகம் என்பது மிகவும் வலிமை வாய்ந்த தேவார பாடலாக கருதப்ப்டுகிறது. வாழ்வில் உள்ள அனைத்து தடைகள், அபாயங்கள் உடல் உபாதைகளை நீக்க இந்த பதிகம் ஓதப்படுகிறது.

குழந்தையிலேயே ஞானம் பெற்றவரான திருஞான சம்பந்தவர் இயற்றியதே கோளறு பதிகம். கோள்களால் ஏற்படக்கூடிய தீமைகளை அறுப்பது என்பது இதற்கு பொருள். இந்த பதிகத்தின் தனித்துவம் என்பது இந்த பாடலில் ஒவ்வொரு கோள்களாக விழித்து அதனிடம் நம் கோரிக்கையை வைத்து ஒவ்வொரு கோரிக்கையின் இறுதியிலும் நீலகண்டனின் அருளை யாசிப்பதை போன்ற ரீதியில் அமைந்திருக்கும்.

உதாரணமாக,

வேயுறு தோளி பங்கன்விடமுண்ட கண்டன் மிகநல்ல வீணை தடவி

மாசறு திங்கள் கங்கை முடிமேல் அணிந்தென் உளமே புகுந்த அதனால்

ஞாயிறுதிங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி சனிபாம் பிரண்டு முடனே

ஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே.

இவ்வாறாக ஒவ்வொரு பாடலிலும் நீலகண்டனை அழைத்து அருள் கோரும் பாங்கு இதனை பாராயணம் செய்பவருக்கு போதிய மன பலத்தை கொடுக்கும். இந்த பாடலை தொடர்ந்து சொல்லி வருகிற போது கோள்களால் ஏற்படவிருந்த பாதிப்புகள் குறைந்து ஒரு தெய்வீக வலை அல்லது அரண் நம்மை சூழ்ந்திருப்பதை நாம் உணர முடியும்.



நேர்மறையான ஆற்றலில் நாம் எப்போதும் நிறைந்திருக்க இந்த பாடல் பக்க பலமாய் அமையும். இன்று சமூக வலைதளங்களில் ஏராளமான புகழ்பெற்ற பாடகர்கள் இந்த பாடலை பண்ணோடு பாடி பதிவேற்றம் செய்திருக்கும் காணொளிகள் காணக்கிடைக்கின்றன.

பதிகத்தில் ஏராளமான பதிகம் இருப்பினும், கோளறு பதிகம் நம் கோலத்தை உயர்த்தும் பதிகம்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News