Kathir News
Begin typing your search above and press return to search.

பண சிக்கல் தீர செய்ய வேண்டிய பரிகாரங்கள் என்ன?

பண சிக்கல் தீர செய்ய வேண்டிய பரிகாரங்கள் என்ன?
X

Kanaga ThoorigaBy : Kanaga Thooriga

  |  28 Dec 2021 6:00 AM IST

வாழ்க்கை என்பது ஒரு முறை தான். வாழ்கை என்பது பல அற்புதங்கள் நிறைந்தது. இவ்வாறு வாழ்க்கையை குறித்து பல தத்துவங்களை நாம் சொன்னாலும். வாழ்வின் பெரும்பலான நேரம் என்பது பெரும்பாலான மனிதர்களுக்கு பணத்தை ஈட்டுவதிலேயே சென்று விடுகிறது.

இந்த பண சிக்கல் தீர ஒருவரின் கடின உழைப்பும், அவரின் விடாமுயற்சி, நேர்மை இவை தான் மூல காரணம் என்ற போதும். ஜோதிட ரீதியில் செய்யக்கூடிய ஒரு சில விஷயங்கள் நல்ல அதிர்வுகளை மீட்க உதவும் என்பது ஜோதிட சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது.

வடக்கு என்பது குபேரரின் வாசல் என்பதால், பணத்தை தெற்கிலோ அல்லது தென் மேற்கிலோ வைப்பது உகந்தது. இவ்வாறு வைத்திருப்பதால் குபேரரின் அருட்கடாக்‌ஷம் கிட்டும் என்பது நம்பிக்கை.

சனி பகவான் சில பிரச்சனைகளை உருவாக்குபவர் என்கிற தவறான பிம்பம் உண்டு. ஆனால் அவரை முறைப்படி வழிபட்டால் பொருளாதார சிக்கலை தீர்க்ககூடியவர் சனி பகவான். மேலும் வீட்டில் உள்ள பணம் பெருக நாம் பணம் வைக்கும் இடத்தில் சிறு கண்ணாடி வைக்கலாம். இது நல்ல நேர்மறை சூழலை அந்த இடத்திற்கு வழங்கும்.

தவறான வழியில் வந்த பணம் தெரியாத பாதையில் சென்றுவிடும் என்பதே தத்துவம். அதனை உணர்ந்து நல்ல வழியில் பணத்தை ஈட்டுங்கள். மேலும் இரைக்கிற கேணி ஊறும் எனும் பழமொழிக்கேற்ப தானமும் தர்மமும் வழங்க வழங்க பணம் சேரும் என்பது நம்பிக்கை.

வீட்டில் குபேர யந்திரம் வைத்திருந்தால், அதனை சிவப்பு நிற வஸ்திரம் வைத்து வழிபடுவது நன்மை தரும். வீட்டில் துளசி செடி வளர்த்தால், அதன் அருகே நெய்யால் தீபமேற்றி தினமும் வணங்கி வர, வீடு இலட்சுமியின் அருளால் நிறைந்திருக்கும். உடைந்த பொருட்களை வீட்டில் வைப்பதை தவிருங்கள், உடைந்த கண்ணாடி, பாத்திரம், சுவாமியின் திருவுருவம் ஆகியவற்றை வைக்காதீர்கள்.

ஒவ்வொரு புதன் கிழமையும் பசுவிற்கு உணவு வழங்கி வர, அனைத்து சங்கடங்களும் தீரும் என்பது ஐதீகம்.

இவையெல்லாம் பொதுவாக செய்யக்கூடிய பரிகாரங்கள். ஒவ்வொருவரின் கர்ம வினைகளுக்கு ஏற்ப பிரச்சனையின் தன்மை மாறுபடும். எப்போது நல்ல வினைகளை செய்வோம். நற்பயனை பெறுவோம்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News