மகா சிவராத்திரி: சதுரகிரி மலைக்கு செல்ல பக்தர்களுக்கு 4 நாள் சிறப்பு அனுமதி!
By : Bharathi Latha
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வத்திராயிருப்பு மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள சுந்தர- சந்தன மகாலிங்கம் கோவில் சுவாமி தரிசனத்திற்கு இப்பொழுது பக்தர்களுக்கு எட்டு நாள் மட்டுமே மாதத்திற்கு அனுமதி வழங்கப்படுகிறது. தற்போது ஏற்பட்டுள்ள நோய் தொற்று காரணமாக கடந்த 8 நாட்கள் மட்டுமே ஒரு மாதத்திற்கு அனுமதி வழங்கப்படுகிறது. மலை உச்சியில் வனப்பகுதியில் அமைந்துள்ள இந்த கோயிலில் உள்ள சுவாமி தரிசனத்திற்கு தற்பொழுது ஒவ்வொரு மாதத்திற்கு ஒருமுறை மட்டும்தான் அனுமதி வழங்கப்பட்டு வருகின்றது. ஆனால் மார்ச் 1ஆம் தேதி வரை இருக்கும் மகாசிவராத்திரி பண்டிகையை முன்னிட்டு தற்போது கூடுதலாக 4 நாட்கள் சிறப்பு தரிசனம் பக்தர்களுக்கு வழங்கப்படுவதாக கோவில் நிர்வாகம் சார்பில் கூறப்பட்டுள்ளது.
ஒவ்வொரு வருடமும் மகா சிவராத்திரி தினத்தன்று குறிப்பாக சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள். அதன்படி இந்த ஆண்டு வருகிற 1-ந் தேதி அன்றும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மகா சிவராத்திரி பண்டிகைக்கு வருவார்கள். இதையொட்டி சதுரகிரி கோவிலுக்கு திரளான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப் படுகிறது. எனவே அதற்காக பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் தற்போது அறிவுரையும் கூறப்பட்டுள்ளது.
பிப்ரவரி 28 தேதி முதல் மார்ச் 3ஆம் தேதி வரை பக்தர்களுக்கு சிறப்பு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. ஆனால் இரவில் மலையில் தங்கக் கூடாது என்றும், அங்கு உள்ள நீரோடையில் குளிக்கக் கூடாது என்றும், எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை எடுத்துச் செல்லக் கூடாது போன்ற பல்வேறு விதிமுறைகளும் கூறப்பட்டுள்ளது. மேலும் இங்கு உள்ள சதுரகிரி மலை சுவாமிக்கு பவுர்ணமி அமாவாசை போன்ற நாட்களில் விசேஷ சிறப்பு பூஜைகள் நடைபெறும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Input & Image courtesy:Maalaimalar