Kathir News
Begin typing your search above and press return to search.

ஏழரை சனியில் இருந்து விடுபட உதவும் சனி அமாவாசை விரதம் - ஏன் கடைப்படிக்க வேண்டும்?

ஏழரை சனியில் இருந்து விடுபட உதவும் சனி அமாவாசை விரதம் - ஏன் கடைப்படிக்க வேண்டும்?

ஏழரை சனியில் இருந்து விடுபட உதவும் சனி அமாவாசை விரதம் - ஏன் கடைப்படிக்க வேண்டும்?

Thoorigai KanagaBy : Thoorigai Kanaga

  |  12 Feb 2021 5:45 AM GMT

நேற்று அமாவாசை, இந்த நாள் இந்து மரபில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. கோவில்களில் சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் அனைத்தும் நடக்கிற ஒரு நாள். அமாவாசை என்பதே சிறப்பு என்ற போதும், சனி அமாவாசை மிகவும் சிறப்பானது. சனி அமாவாசை என்பது, சனிக்கிழமையில் வருகிற அமாவாசை. இந்த நாள் சனி பகவானை வணங்குவதற்கு மிக உகந்த தினமாக கருதப்படுகிறது. மேலும் மக்கள் தங்கள் முன்னோர்களை வணங்க இந்த நாளே சிறந்தது என கருதும் நம்பிக்கையும் உண்டு.

இந்த நாளில் செய்யப்படுகிற பூஜைகளும், சடங்குகளும் சாதரண அமாவாசையில் செய்வதை காட்டிலும் மிகச்சிறப்பான பலனை தரக்கூடியதாக இருக்கிறது. மிக குறிப்பாக, இந்த நாள் நம் பித்ருக்களுக்கு அர்பணங்கள் வழங்க ஏற்ற தினம். இந்த தினத்தில் அவர்களை வணங்குவது அவர்களின் மோக்‌ஷத்திற்கு உதவியாக இருக்கும் என சொல்லப்படுகிறது. மேலும் அவர்களின் அருள் நமக்கு கிடைக்கவும் இந்த நாளில் செய்யப்படுகிற வழிபாடு உதவும்.

மேலும் உளவியல் ரீதியாக இந்த நாளில் பூஜைகள் செய்கிற போது, ஒருவரின் ஆன்ம பலம் உயர்ந்து அனைத்திலும் ஒரு நேர்மறை பார்வை ஏற்படுகிறது. மகரம் மற்றும் மீன ராசியின் அதிபதியாக சனி பகவான் இருப்பதால், இந்த நாளில் இந்த ராசிகாரர்கள் சனி பகவானை வணங்கி அமாவாசை விரதத்தை கடைப்பிடித்தால் மிகுந்த நன்மை உண்டாகும். நாடெங்கும் இருக்கும் சனீஸ்வரன் கோவிலில் இந்த நாளில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். இந்த நாளில் சனீஸ்வரருக்கு எள்ளினால் ஆன பிரசாதத்தை படைப்பதும் , மண் விளக்குகளில் எள்ளு எண்ணை ஊற்றி தீபம் ஏற்றுவதும் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். அப்போது, ஒரு சிறிய கறுப்பு துணியில் எள்ளினை நிரப்பி அவை அந்த மண் விளக்கில் நனைத்து தீபத்தில் இடுவது நல்ல நன்மைகளை தரும்.

இந்த நாளில் சனி தேவனுக்கு உரிய மந்திரங்களை சொல்வது வழக்கம். மேலும் இந்நாளில் ஏழை எளியோருக்கு அரிசி, எள்ளு போன்றவற்றை தானம் வழங்குவது சனி பகவானின் அருளை நமக்கு பெற்று தரும். ஏழரை ஆண்டுகள் சனி நடக்கும் ராசிகாரர்கள் இந்த சனி அமாவாசை விரதத்தை கடைப்பிடிப்பது மிகுந்த நன்மை தரும்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News