Kathir News
Begin typing your search above and press return to search.

சிலர் உணர்வு ரீதியாக உக்கிரமாக இருப்பது ஏன்? ஆயுர்வேதம் சொல்வது என்ன?

Kanaga ThoorigaBy : Kanaga Thooriga

  |  10 Feb 2023 1:00 AM GMT

ஆயுர்வேதம் என்பது இயற்கையான முறையில் ஆரோக்கியத்தை பேணுவதற்கான பண்டைய அறிவியல். ஆயுர்வேதம் சொல்லாத தீர்வுகள் இல்லை. அனைத்து விதமான இடர்களுக்கும் ஆயுர்வேதத்தில் மருந்து உண்டு. இதில் பலரும் சந்திக்கும் பிரச்சனை என்னவெனில் உடல் உஷ்ணம். வெளிப்புற சூழல் குளிர்ந்து இருந்தாலும் சிலருக்கு உடல் உஷ்ணம் என்பது தணிக்க முடியாததாகவே இருக்கும்.

சிலர் மனரீதியாக உணர்வு ரீதியாக எப்போதும் உக்கிரமாகவே இருப்பார்க்கள். இதற்கு உஷ்ணமான அவர்களின் உடல்நிலையே காரணமாக இருக்கலாம். இந்த உடல் உஷ்ணம் என்பது நாம் உண்ணும் உணவின் மூலமாக, உடற்பயிற்சி அதீதமாக செய்யும் போது மற்றும் சீரான அளஆயுர்வேதம் என்பது இயற்கையான முறையில் ஆரோக்கியத்தை பேணுவதற்கான பண்டைய அறிவியல். ஆயுர்வேதம் சொல்லாத தீர்வுகள் இல்லை. அனைத்து விதமான இடர்களுக்கும் ஆயுர்வேதத்தில் மருந்து உண்டு. இதில் பலரும் சந்திக்கும் பிரச்சனை என்னவெனில் உடல் உஷ்ணம். வெளிப்புற சூழல் குளிர்ந்து இருந்தாலும் சிலருக்கு உடல் உஷ்ணம் என்பது தணிக்க முடியாததாகவே இருக்கும்.

சிலர் மனரீதியாக உணர்வு ரீதியாக எப்போதும் உக்கிரமாகவே இருப்பார்க்கள். இதற்கு உஷ்ணமான அவர்களின் உடல்நிலையே காரணமாக இருக்கலாம். இந்த உடல் உஷ்ணம் என்பது நாம் உண்ணும் உணவின் மூலமாக, உடற்பயிற்சி அதீதமாக செய்யும் போது மற்றும் சீரான அளவில் உறக்கம் இல்லாத போது இது நிகழ்கிறது.

ஆயுர்வேதத்தில் மூன்று முக்கிய அம்சங்கள் பிரபஞ்சத்தின் அனைத்திற்கும் அடிப்படையாக இருக்கிறது. தோஷம், வாதம் மற்றும் பித்தம் இந்த மூன்று அம்சங்கள் ஒருவரின் ஆரோக்கியத்தில் முக்கிய பங்காற்றுகிறது. இயற்கையின் ஒவ்வொரு அங்கமும் இந்த மூன்றின் கலவையாகவே உருவானது.

இயற்கையில் முக்கிய பகுதியான கோடை காலம் என்பது மிகவும் கூர்மையான சூட்டை உருவாக்ககூடியது இந்த காலத்தில் பித்தம் என்பது மேலோங்கி இருக்கும். எனவே இந்த காலத்தில் பித்த தோஷத்தை அதிகரிக்காமல் பார்த்து கொள்வது மிக அவசியம்.

உடலில் உஷ்ணத்தை எதிர்த்து போரிடுவதற்கு உணவில் அதிகமான ஆல்கலைன் இருப்பதாக தேர்வு செய்ய வேண்டும். மேலும் நீர் காய்கறிகள், நீர் ஆகாரம் ஆகியவற்றை உட்கொள்வதால் உடலில் இருக்கும் ஈரபதம் தொடர்ந்து நிலைத்திருக்கும். உலர்வான உணர்வை உடல் அடையாமல் பார்த்து கொள்ள வேண்டியது அவசியம்.

பூண்டு, மிளகாய், தக்காளி, உப்பு மிகுந்த பால் பொருட்கள் போன்ற விஷயங்களை தவிர்க்க வேண்டும். எனவே உடலை சமநிலையுடன் வைத்திருக்க அதிகமான சாலட் வகைகளை சேர்த்து கொள்வது நலம். எனவே தண்ணீர் நிறைந்த பல வகைகளான தர்பூசணி, பெர்ரீஸ், வெள்ளரி, நுங்கு போன்ற வகைகளை சேர்த்து கொள்வது நல்லது.

உடல் உஷ்ணத்தை போக்குகிறோம் என குளிர்ச்சியான பானங்களை ஒருபோதும் எடுத்து கொள்ளாதீர்கள். காரணம் நாம் உண்ணும் உணவை செரிக்கும் நொதியானது ஒரு நெருப்பிற்கு ஒத்த உஷ்ணத்தை கொண்து, நம் உஷ்ணத்தை தவிர்க்கும் வழிமுறை என நினைத்து குளிர்ச்சையான உணவை உட்கொண்டால், அந்த நெருப்பு நொதியின் மீது நாம் குளிர்வான பொருளை ஊற்றி அணைப்பதை போன்றாகும். இதனால் ஜீரண செயல்முறை தடைப்பட்டு, உடல் உஷ்ணம் அதிகரிக்கும். எனவே உடல் பித்தத்தை குறைக்க வேண்டியது அவசியம்.

+.+

வில் உறக்கம் இல்லாத போது இது நிகழ்கிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News