Kathir News
Begin typing your search above and press return to search.

திருவண்ணாமலை கோவிலில் அமர்வு தரிசனம் நிரந்தரமாக ரத்து - கோவில் நிர்வாகம்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் அமர்வு தரிசனம் முற்றிலும் ரத்து செய்யப்படுவதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

திருவண்ணாமலை கோவிலில் அமர்வு தரிசனம் நிரந்தரமாக ரத்து - கோவில் நிர்வாகம்!
X

KarthigaBy : Karthiga

  |  5 Jan 2024 11:15 AM GMT

ஈசன் அருள் பாலிக்கும் தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலாகும். இந்த கோவிலில் ஈசன் அண்ணாமலையார் என்றும் அருணாச்சலேஸ்வரர் என்றும் அழைக்கப்படுகிறார். பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குவது திருவண்ணாமலை திருக்கோவில்.மேலும் இது தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகும். திருவாசகத் திருத்தலங்களில் ஒன்று என்ற பெருமையினையும் கொண்ட தலமாகும். இத்தலத்தின் மூலவர் அருணாசலேசுவரர் என்றும், அம்பிகை உண்ணாமுலையாள் என்றும் அழைக்கப்படுகிறார்.


திருவண்ணாமலையில் கிரிவலம் செல்வோர்களின் எண்ணிக்கையும் ஏராளம்.பௌர்ணமி தினத்தன்று கிரிவலம் செல்வது வாழ்க்கையில் அனைத்து சுபிட்சங்களையும் தேடித் தரும் என்ற நம்பிக்கை மக்களிடையே காணப்படுவதால் அண்ணாமலையார் தரிசிக்க ஒவ்வொரு பௌர்ணமி தினத்திலும் கூட்டம் அலைமோதும்.சபரிமலை ஐய்யப்பன் கோயில் சீசன் தொடங்கியுள்ளதால் திருவண்ணாமலை கோயிலில பக்தர்கள் கூட்டம் நிரம்பியுள்ளது. நாளுக்கு நாள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இதனைத் தொடர்ந்து அமர்வு தரிசனம் முற்றிலுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.


திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் VVIP, ViP. உள்ளிட்ட அனைவருக்கும் அமர்வு தரிசனம் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. பக்தர்களின் கூட்டம் அதிக அளவில் வருவதாலும், பக்தர்களின் நலன் கருதியும், விரைவாக தரிசனம் செய்யும் வகையில் கோயில் நிர்வாகம் சார்பில் அமர்வு தரிசனம் இன்று முதல் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக கோயில் நிர்வாகம் அறிவிதுள்ளது.



Next Story
கதிர் தொகுப்பு
Trending News