Kathir News
Begin typing your search above and press return to search.

சனிக்கிழமையில் விரதம் இருப்பதன் அதிசய மகத்துவம் என்ன?

சனிக்கிழமையில் விரதம் இருப்பதன் அதிசய மகத்துவம் என்ன?
X

G PradeepBy : G Pradeep

  |  13 March 2021 12:30 AM GMT

மற்ற விரதங்களை காட்டிலும் சனிக்கிழமை விரதத்திற்கென்று தனி மகத்துவம் உண்டு. ஒரு மாதத்தின் வளர் பிறையில் வரும் எந்தவொரு சுக்லபட்சத்தின் முதல் சனிக்கிழமையிலும் ஒருவர் விரதத்தை தொடங்கலாம். இந்த விரதம் 11 வாரம் துவங்கி 51 வாரங்கள் வரை கடைப்பிடித்தால் அது நன்மை தரும் என்பது நம்பிக்கை.



சனி பகவானுக்கான பூஜை எப்படி செய்வது? விரதத்தை அனுசரிப்பவர் காலையில் எழுந்து புனித நீராடி கருப்பு அல்லது அடர் நீல நிறத்தில் உடையணிந்து கொள்ளலாம். இரும்பு உலோகத்தால் செய்யப்பட்ட சனி பகவான் விக்ரகத்தை வழிபடுவது கூடுதல் சிறப்பு. பூஜையின் போது கருப்பு சாயலிலான மலர்கள், எள்ளு, மற்றும் கருப்பு வஸ்திரம் சனி பகவானுக்கு படைக்கப்ப்பட வேண்டும். உடன் வேக வைத்த அரிசியையும் வைக்கலாம்

இந்த பூஜை சனி பகவான் மந்திர உச்சாடனையுடன் அல்லது சனி பகவான் கதை உபதேசத்துடன் முடிவடைதல் கூடுதல் நன்மை தரும்.

இந்த பூஜையை அனுசரிக்கும் பக்தர்கள் அனுமர் அல்லது பைரவர் கோவிலுக்கு செல்லலாம் ஒரு நாள் முழுவதும் விரதம் இருந்த பின் அடுத்த நாள் சூரிய அஸ்தமனத்திற்கு பின் உணவை உட்கொள்ளலாம்.

ஒரு முறை 9 கிரகங்களிடையே தங்களில் யார் உயர்ந்தவர்கள் என்ற சண்டை வந்த போது அவர்கள் இந்திரனிடத்திலே தீர்ப்புக்காக சென்றனர். ஆனால் தீர்ப்பை சொன்னால் எங்கே யாருடைய கோவத்திற்காவது ஆளாக நேருமோ என எண்ணி அவர் உஜ்ஜைனியின் அரசர் விக்ரமாதித்தியரிடம் 9 கிரகங்களை அனுப்பினார்.



விக்ரமாதித்தியர் தன் அரசவையில் தங்கம், வெள்ளி, செம்பு, இரும்பு என ஒன்பது உலோகங்களான நாற்காலிகளை அமைத்து அதில் ஓன்பது கிரகங்களை தங்களின் விருப்பம் போல் அமரச்சொன்னார். அதில் சனி பகவான் பொருள் தன்மையிலான மதிப்பில் இறுதியாய் இருந்த இரும்பு ஆசனத்தில் அமர்ந்தார். அவரவர் தேர்வு செய்த உலோகத்தின் மதிப்பே அவர்களின் மதிப்பும் ஆகும் என விக்ரமாதித்தியர் தீர்ப்பு சொன்ன போது. சனி பகவான் கடைசியிடத்தில் இருந்தார். இதனால் சனி பகவானின் கோபத்திற்கு ஆளான விக்ரமாதித்தியன் அதன் பின் ஏழரை ஆண்டுகள் மிகவும் இன்னலுக்கு உள்ளானர்.

அதன் பின் சனிகிழமை விரதத்தை பற்றி அறிந்து ஒவ்வொறு சனிக்கிழமையும் தொடர்ச்சியாக விரதம் இருந்த போது அவரின் இடர்கள் விலகி அவர் சனி பகவானின் ஆசியை பரிபூரணமாக பெற்றதாக கதைகளில் சொல்லப்படுகின்றன.

சனிக்கிழமை விரதம் சங்கடம் தீர்க்கும் விரதம்!

Next Story
கதிர் தொகுப்பு
Trending News