Kathir News
Begin typing your search above and press return to search.

தெய்வீக வழிபாட்டில் தூபம், அகர்பத்தி போன்ற வாசனை பொருட்கள் ஏன்?

தெய்வீக வழிபாட்டில்  தூபம், அகர்பத்தி போன்ற வாசனை பொருட்கள் ஏன்?
X

G PradeepBy : G Pradeep

  |  19 March 2021 12:15 AM GMT

ஆன்மீக சடங்குகளில் வாசனைகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுவது ஏன் ?

நீங்கள் பார்த்திருப்பீர்கள் பல கோவில்களில் கடவுள் விக்ரஹங்களுக்கு தூய

சந்தனம், சுத்தமான நெய் போன்ற வாசனை நிறைந்த திரவியங்களை கடவுளுக்கு அபிஷேகமாக படைப்பார்கள்.



இவற்றிற்கு பின் சொல்லப்படும் ஒரு முக்கிய காரணம், வாசனை நறுமணங்கள் நம் மனதை ஒரு நிலைப்படுத்தும். வெளிப்புற சூழலிலிருந்து விடுபட்டு இறைவனுடன் மனம் ஒன்ற இந்த வாசனை உதவும்.

தூபம், அகர்பத்தி போன்ற வாசனை கமழும் தெய்வீக பொருட்கள் கடவுளுடன் தொடர்பு கொள்வதற்கு மட்டுமல்லாமல், அவற்றை வீடுகளிலும் கோவில்களிலும் பயன்படுத்துகிற போது அவை ஆயுர்வேத ரீதியாகவும் நன்மை அளிப்பதாக சொல்லப்படுகின்றன.

தூபமும் அகர்பத்தியும் மனதையும் நம் வெளிப்புறச்சூழல் இரண்டையும் சேர்த்தே அதன் நறுமணத்தால் சுத்திகரிக்கிறது.



இதன் நறுமணத்தை நுகர்கிற போது மனதிலிருக்கும் பதட்டம், கோபம் வெறுப்பு போன்ற எதிர்மறை எண்ணங்கள் குறைந்து போவதாக சொல்லப்படுகிறது. மேலும் இதிலிருந்து வெளிவரும் நறுமணம் அச்சூழலின் உள்ள மனிதர்களின் அமைதியை பரப்பி அந்த சூழலையே லகுவாக்குவிறது. ஆஸ்துமா, உளச்சிக்கல், போன்ற நோயினால் அவதியடைபவர்கள் இந்த நறுமணத்தை சுவாசித்தால் அவர்கள் மனமும் உடலும் ஒருவித அமைதி கொள்ளும்.

தூபங்களும், அகர்பத்திகளும் ஒரு காலத்தில் தேர்ந்த வாசனை மூலிகைகளை கொண்டு தயாரிக்கப்பட்டது. வேத காலத்தில் கூட யாகங்களின் போது வாசனை நல்கும் வேர்கள், மூலிகைகளை யாகத்திற்கு பயன்படுத்துவார்கள். மேலும் வாசனை கமழும் எண்ணெய் போன்றவையும் பயன்படுத்தப்படும்.

இவையனத்தும் தெய்வீகத்திற்கும் வாசனைக்கும் இருக்கும் தொடர்பை, தெய்வீக நறுமணம் என்பது ஆன்மீக பாதையில் செல்பவர்களின் பாதையை எவ்வாறு எளிமைப்படுத்துகிறது என்கிற முக்கியதுவத்தை நமக்கு உணர்த்துகிறது.

ஆனால் இன்று பல வேதிப்பொருட்கள் பயன்படுத்தப்படுவதையும் நாம் காண்கிறோம். தூபமும் அகர்பத்தியும் எதற்க்காக ? என்ற உண்மை விளங்கினால் தரமான பொருட்களை கண்டறியும் விழிப்புணர்வும் நமக்கு இயல்பிலேயே அமையும்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News