Kathir News
Begin typing your search above and press return to search.

சிரமம் போக்கி செல்வம் அருளும் சிறப்புகள் நிறைந்த சித்தி விநாயகர் ஆலயம்

சிரமம் போக்கி செல்வம் அருளும் சிறப்புகள் நிறைந்த சித்தி விநாயகர் ஆலயம்

Kanaga ThoorigaBy : Kanaga Thooriga

  |  18 Jun 2022 1:02 AM GMT

முழு முதற் கடவுளாம் கணபதிக்கு இந்தியாவில் எழுப்பட்ட எராளமான ஆலயங்களில் முக்கியமானது மும்பையில் இருக்கும் சித்தி விநாயகர் ஆலயம். இந்த ஆலயம் மஹாராஸ்ட்ராவில் உள்ள மும்பையின் பிரபாதேவி எனும் இடத்தில் அமைந்துள்ளது. இந்த கோவில் 1801 ஆம் ஆண்டு இலக்‌ஷ்மண் விது மற்றும் தியுபாய் பட்டேல் என்பவர்களால் கட்டப்பட்டது. இன்னும் சொல்லப்போனால் இந்தியாவின் பணக்கார கோவில்களுள் ஒன்று என்று இக்கோவிலை சொல்லலாம்.

இந்த கோவிலினுள் இருக்கும் மண்டப கருவறையில் கணபதி வீற்றிருக்கிறார். இக்கருவறையின் கதவுகளில் அஷ்டவிநாயகரின் திருவுருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இக்கருவறையின் மேற் கூரை தங்க ஓடுகளால் வெய்யப்பட்டுள்ளது. இருபதாம் நூற்றாண்டுக்கு பிறகே மிகச் சிறிய ஆலயமாக இருந்த இந்த தலம், இன்று இருக்கும் பிரமாண்ட கோவிலாக உருமாறியுள்ளது. அரசியல்வாதிகள், சினிமா நட்சத்திரங்கள் என பல்வேறு துறையை சார்ந்த நட்சத்திரங்கள் இங்கே இறைவனின் அருளை பெற வருவது வாடிக்கையான ஒன்று.

இங்கிருக்கும் சித்தி விநாயரை "நவசாச்சா கணபதி " என்று அழைக்கின்றனர். இதன் பொருள் தூய பக்தியுடன் வேண்டுவோருக்கு வேண்டும் வரமருளும் கணபதி என்பதாகும். இக்கோவில் ஆரம்ப காலத்தில் மிக சிறியதாகவே இருந்தது. விவசாயம் செய்து வந்த பணக்கார பெண்மணியான தியுபஅய் பட்டேல் அவர்களுக்கு குழந்தை இல்லை. என பிள்ளை வரம் வேண்டியும், பிள்ளை வரம் கேட்டு வருவோருக்கு இறைவன் அருள வேண்டும் என்ற தூய எண்ணத்திலும் அவரெழுப்பிய ஆலயம் தான் இது.

மேலும் 1952 ஆம் ஆண்டு இக்கோவில் வளாகத்தில் அனுமருக்கு தனியாக சந்நிதி கட்டப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் இக்கோவிலில் கோடிகளில் நன்கொடைகள் குவிகின்றது. இதனாலேயே இக்கோவிலை பணக்கார ஆலயங்களுள் ஒன்று என்று அழைக்கின்றனர்.

இந்த சித்திவிநாயகரின் சிறப்பம்சம் யாதெனில் அவருடைய துதிக்கை இக்கோவிலில் வலது புறமாக திரும்பியிருக்கும். மற்றும் நான்கு கரங்களுடன் காட்சியளிக்கிறார். அதனாலேயே சதுர் புஜர் என்றும் அழைக்கப்படுகிறார். ஒரு கரத்தில் தாமரையும், மற்றொரு கரத்தில் கோடாரி, மூன்றாம் கரத்தில் ஜப மாலை மற்றும் நான்காம் கரத்தில் கிண்ணம் நிறைய பிரசாதம் ஏந்தி செளந்தர்ய ரூபமாக காட்சி தருகிறார்.

வேண்டுவோருக்கு வேண்டும் வரம் அருளும் சித்தி விநாயகர் தரிசனம், தரிசிப்போர் அனைவருக்கும் நல்ல மாற்றத்தை தருவது உறுதி.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News