Kathir News
Begin typing your search above and press return to search.

லக்ஷ்மி தேவி உங்களுக்கு அருள் புரிய தொடங்கிவிட்டாள் என்பதன் அறிகுறிகள்

லட்சுமி தேவியின் அருளைப் பெற்றவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாகவும் செழிப்பாகவும் இருக்கும். நாம் என்ன தான் பணம் சம்பாதித்தாலும், லட்சுமி தேவியின் அருள் இருந்தால் தான் அந்த செல்வம் நம் கையில் நிலைத்திருக்கும் என்பது நம்பிக்கை.

லக்ஷ்மி தேவி உங்களுக்கு அருள் புரிய தொடங்கிவிட்டாள் என்பதன் அறிகுறிகள்
X

KarthigaBy : Karthiga

  |  24 Sept 2023 6:00 AM IST

ஒருவருக்கு நல்ல நாட்கள் தொடங்கும் போது அதற்கு முன் சில சுப அறிகுறிகள் தென்படுகின்றன. மத நம்பிக்கையின் படி, லட்சுமி தேவி செல்வத்தின் தெய்வம் என்று அழைக்கப்படுகிறார். லக்ஷ்மி தேவியின் அருள் பெற்றவர்கள் வாழ்வில் எந்த விதமான பிரச்சனைகளையும் சந்திக்க மாட்டார்கள் என்பதும் ஐதீகம்.


ஒரு நபர் மகிழ்ச்சியாக இருக்க தொடங்குகிறார் என்றாலே நல்ல காலம் தொடங்க போகிறது என்று அர்த்தம்.நல்ல காலம் தொடங்கும் போது ​​​​நாம் உற்சாகமடைவது வழக்கம் என்று கூறப்படுகிறது. அதனால் அவருக்குள் ஆற்றல் மற்றும் மகிழ்ச்சி அதிகமாக ஏற்படும்.நல்ல காலம் வருவதற்கு முன், வீட்டைச் சுற்றியுள்ள மரங்கள் மற்றும் செடிகள் பசுமையாக மாறும். குறிப்பாக துளசி செடி மிகவும் அழகாகவும் பசுமையாகவும் மாற ஆரம்பிக்கும்.

ஜோதிடத்தின்படி, எல்லா இடங்களிலிருந்தும் நீங்கள் மரியாதை பெறத் தொடங்குவீர்கள். மக்கள் உங்களைப் பாராட்டத் தொடங்குவார்கள். அதன் மூலம் உங்களுக்கு நல்ல காலம் தொடங்கிவிட்டது என்பதை புரிந்து கொள்ளுங்கள். நல்ல காலம் தொடங்கும் முன்பே ஒருவருக்கு எதிர்காலத்தைப் பற்றிய யோசனை கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது. எதிர்காலத்தைப் பற்றிய பல வகையான கற்பனைகள் மனதில் ஓடத் தொடங்குகின்றன.


உங்கள் வீட்டுச் சுவர்கள் அல்லது கூரையின் மூலையில் பறவை கூடு கட்டியிருந்தால், அது ஒரு நல்ல அறிகுறியாக கருதப்படுகிறது. இதனால் ஒருவரின் அனைத்து பணிகளும் விரைவாகவும், எவ்வித தடையும் இல்லாமல் சிறப்பாகவும் முடிவடைந்து, மகத்தான செல்வத்தைப் பெறுவார். வீட்டில் ஒருவர் ஒரே நேரத்தில் மூன்று பல்லிகளை பார்த்தால், லட்சுமி தேவி விரைவில் உங்களுக்கு சிறப்பான ஆசியை வழங்கப் போகிறார் என்று அர்த்தம். இதன் விளைவாக திடீரென்று பல இடங்களில் இருந்து பணம் வர ஆரம்பித்து, கையில் பணம் அதிகம் சேரும்.

இரவு தூங்கும் போது ஒருவர் தனது கனவில் துடைப்பம், கலசம், ஆந்தை, சங்கு, யானை, பாம்பு, ரோஜாப் பூ போன்றவற்றைக் கண்டால், அது லட்சுமி தேவியின் அருளால் செல்வ செழிப்பு மற்றும் வாழ்வில் வளம் பெருகும் என்பதற்கான அடையாளமாகும். காலையில் வேலைக்கு செல்லும் போது சங்கு சப்தம் கேட்டால், லட்சுமி தேவியின் ஆசி கிடைத்துள்ளது என்பதை புரிந்து கொள்ளுங்கள்.


SOURCE :tamil.news18.com

Next Story
கதிர் தொகுப்பு
Trending News