Kathir News
Begin typing your search above and press return to search.

கடன் தொல்லையிலிருந்து விடுபட வீட்டிலேயே செய்யக்கூடிய எளிமையான வழிகள்

கடன் தொல்லையிலிருந்து விடுபட வீட்டிலேயே செய்யக்கூடிய எளிமையான வழிகள்
X

Kanaga ThoorigaBy : Kanaga Thooriga

  |  10 Jan 2023 12:45 AM GMT

நம் அன்றாட வாழ்வாதாரத்தின் அடிநாதமாக இருப்பது பணம். நம் அத்யாவசிய தேவைகளை பூர்த்தி செய்ய தேவை. பணத்தை ஈட்டுவதென்பது இன்றைய காலத்தில் சுலபாமனது அல்ல. நாம் செய்யும் தொழிலில், வேலையில் அர்ப்பணிப்பும், உழைப்பும் தேவை. ஆனால் சிலர் எத்தனை கடுமையாக உழைத்தும் அதற்கு போதுமான பொருளாதார ஏற்றம் இல்லை என சொல்வதை கேட்டிருக்கிறோம்.

இதற்கு ஜோதிட ரீதியான தீர்வுகளை பலர் அணுகுவதுண்டு. ஜோதிட பலன்கள் ஒவ்வொரின் கட்டங்களுக்கு ஏற்ப மாறுபடுவதுண்டு. ஒருவருக்கு சொல்லப்படும் பரிகாரம் மற்றொருவருக்கு முழுமையாக பொருந்தி போகும் வாய்ப்புகள் குறைவு. இருப்பினும் எந்த ராசிக்காரரும் செய்யக்கூடிய பொது பரிகாரங்கள் சில உண்டு.

அந்த வகையில் தொடர் கடன், பொருளாதார சிக்கலில் இருந்து மீள முடியாத பிரச்சனைகளுக்கு ஜோதிட வல்லுநர்கள் பரிந்துரைக்கும் முக்கியமான ஒரு பரிகாரம், சூரிய பகவானை வழிபடுவது. தினமும் அதிகாலை சூரியோதயத்தின் போது சூரிய பகவானுக்கு சிறிது நீரை அர்ப்பணித்து “அவும் ஆதித்யாய நமஹ” என்கிற மந்திரத்தை சொல்லி அவரை வணங்கி வர ஒருவர் கடன் தொல்லையில் இருந்து விடுபெற முடியும். காரணம் சூரிய பகவான் வளங்களை அள்ளி வழங்குவதில் அதிபதியாக திகழ்கிறார்.

மேலும் ஏழை எளிய மக்களுக்கு பழங்களை தானமாக அளித்து வந்தால் தீராத கடனிலிருந்து விடுபட முடியும் என்றும் பரிந்துரைக்கின்றனர். வீடுகளில் செய்யும் பூஜையின் மூலமாகவும் கடன் தொல்லையில் இருந்து நாம் விடுபட முடியும். சுத்தமான பசும் நெய்யில் 5 கிராம்புகளை, கற்பூரத்துடன் எரித்து வர வீட்டிலிருக்கும் தீய அதிர்வுகள் நீங்கி நல்லதிர்வுகள் நிரம்பி, தொடர்ந்து அனுபவித்து வந்த இன்னல்கள் தீரும்.

செவ்வாய் கிழமைகளில் அனுமன் நாமத்தை உச்சாடணம் செய்து, அனுமரை வழிபட்டு வர தீராத சிக்கல் தீரும். இதை தவிர்த்து கடன் சிக்கலின் போது மட்டுமன்றி, மற்ற நாட்களிலும் பின்வரும் குறிப்புகளை பின் தொடர்ந்து வர பிரச்சனைகள் தீரும் என்பது நம்பிக்கை.

கழிவறையில் ஒரு சிறு கிண்ணத்தில் கல் உப்பை இட்டு வைக்கலாம்.

தென்மேற்கு மூலையில் உங்கள் பணம், நகை, போன்ற விலை மதிப்புடைய பொருட்களை வைத்து வர அவை பெருகும் என்பது ஐதீகம்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News