Kathir News
Begin typing your search above and press return to search.

சிவன்மலை உத்தரவு பெட்டி: போகர் சித்தர் படம் வைக்க காரணம் என்ன?

ஆச்சரியத்தை உண்டு பண்ணும் சிவன்மலை உத்தரவு பெட்டி.

சிவன்மலை உத்தரவு பெட்டி: போகர் சித்தர் படம் வைக்க காரணம் என்ன?
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  4 April 2022 1:57 AM GMT

தமிழ்நாட்டில் திருப்பூர் மாவட்டம், காங்கேயத்துக்கு அருகிலுள்ள சிவன்மலையில் அமைந்துள்ள அருணகிரிநாதரால் திருப்புகழில் பாடப்பெற்ற பெருமை கொண்ட முருகன் கோவில் சிவன்மலை சுப்பிரமணியர் கோவில் ஆகும். ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பழமையான கோவிலாகும். இந்த கோவிலில் உள்ள உத்தரவு பெட்டி என்பது தனிச்சிறப்பு பெற்றுள்ளது. மேலும் பக்தர்கள் கனவில் தோன்றி அருள் வாக்கு விளங்கும் இறைவர் பல்வேறு பொருட்களை உத்தரவு பெட்டியில் வைத்து பூஜிக்க வேண்டியுள்ளார். பெட்டியில் வைத்து பூஜிக்கும் பொருட்களுக்கு ஏற்ப உலகில் மாற்றம் நிகழும் என்பதை இந்த கோவிலில் ஐதீகம்.


சிவன்மலை ஆண்டவன் உத்தரவுபெட்டியில் இதுவரை சுமார் ஏர் கலப்பை, தங்கம், ரூபாய் நோட்டு, துப்பாக்கி, மண், ஆற்று மணல், தண்ணீர், உப்பு, பூமாலை, துளசி போன்ற 100க்கும் மேற்பட்ட பொருட்கள் வைத்து பூஜை செய்யப்பட்டுள்ளது. ஆண்டவர் உத்தரவு உடன் கண்ணாடிப் பெட்டிக்குள் வைக்கப்படும் பொருள் சமுதாயத்தில் முக்கியத்துவம் பெறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. மேலும் இந்தக் கோவிலில் பெட்டியில் வைத்து பூஜிக்கப்படும் பொருட்களுக்கு, உலகில் அந்தப் பொருள் அழிவை சந்திக்கும் அல்லது அந்தப் பொருளின் விலை மிகக் கடுமையாக உயரும் என்பது ஐதீகம்.


அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் போகர் சித்தர் படம் வைத்து பூஜை செய்யப்பட்டது. இந்த நிலையில் கடலூரை சேர்ந்த கபில்தேவ்,45 என்ற பக்தரின் கனவில் உத்தரவான, சித்தர்களில் முக்கியமானவரும், பழனி முருகன் நவபாசன சிலையை செய்தவருமான போகர் சித்தரின் படம் வைத்து பூசை செய்யப்பட்டு வருகிறது. சித்தர்களிளேயே மிகவும் சக்தி வாய்ந்தவராகவும், தமிழ்க் கடவுள் முருகன் சிலையை செய்தவருமான போகரின் படம் உத்திரவாகி உள்ளதால், உலகில் மீண்டும் சித்தர்கள் ஆட்சி மலரும் என்று பக்தர்கள் கூறினர்.

Input & Image courtesy: Oneindia News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News